எண்ணுறுப்புகளையும் வடசொற்களாலேயே கூறுவர். பொருட்டொகைகளை முதலிலிருந்து கவனித்துக்கொண்டே வந்தால், தொல்காப்பியர் காலத்தில் இரண்டொரு வட சொற்களே தோன்றிப் பின்பு வரவர மிக்குத் தற்காலத்தில், பொருட் பாகுபாடுகளெல்லாம் ஆரியமோ என்று மயங்கும் படியா யிருப்பது தோன்றும். தவத்திற்குரிய எண்ணுறுப்புகளில் வளிநிலை மிக முக்கியமானது. இதைப் பிராணாயாமம் என்பர் வடநூலார். உண்மூச்சு, வெளிமூச்சு என்னும் இருவகை மூச்சு களில் முன்னது ஒரு மடங்கும் பின்னது ஒன்றரை மடங்கு மாகும். இவ் விரண்டையும் சமமாக்கிவிட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்பது முன்னோர் கருத்து. அங்ஙனம் சமமாக்கி இருவகை மூச்சுகளையும் நிகழ்த்தும்போதே, கடவுள் பெயரான சிவ என்னும் ஈரெழுத்துகளையும் மந்திரமாக வொலித்துக்கொள்ளும்படியான முறையையும் அவர்கள் வகுத்தார்கள். இயல்பாகக் குறுகியும் நீண்டுமிருக்கின்ற உண்மூச்சு வெளிமூச்சுகள், குறிலும் நெடிலுமாகவுள்ள 'சிவா' என்னும் விளிப்பெயர் போல்வ வென்றும். அவற்றைச் 'சிவ' என்னும் விளிவடிவை யொக்குமாறு சமப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அவ் விருவகை மூச்சுகளையும் 'சிவ' என்னும் ஈரெழுத்தொலிகளாகக் கருதுவதுடன், அவ் வொலி களாகவே அம் மூச்சுகளைப் புறத்தார்க்குப் புலனாகாதபடி மெல்லிதாய் உயிர்க்க வேண்டுமென்றும், அதனால் உடலுக்கு இளமையும் ஆன்மாவிற்கு வீடுபேறும் கிட்டும் என்றும் முன்னோர் கொண்டனர். இவற்றை, “கூட மெடுத்துக் குடிபுக்க மங்கைய ரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குல நீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோல வஞ்செழுத் தாமே” | (திருமந். 576) |
“வளியினை வாங்கி வயத்தி லடக்கிற் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்” “சிவசிவ வென்கிலர் தீவினை யாளர் சிவசிவ வென்றிடத் தீவினை மாளும் சிவசிவ வென்றிடத் தேவரு மாவர் சிவசிவ வென்னச் சிவகதி தானே” | (திருமந். 2716) |
|