பக்கம் எண் :

முன்னுரை 31

பிழைப்பும் குடியிருக்க இடமுமின்றிப் பல பார்ப்பனர் காட்டுவழியா யலைந்து திரிந்தமை, உடன்போக்கில் 'வேதியரை வினவல்' என்னுந் துறையும் “ஒருவாய்ச் சோற்றுக்கு ஊர் வழியே போனான் பார்ப்பான்”, “பார்ப் பானுக்கும் பன்றிக்கும் பயணச் செலவில்லை” என்னும் பழமொழிகளும் உணர்த்தும்.

கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை

கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நிலை பூசாரியமாகும்.

“சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது....”

(சிலப். 1 : 51-3)

என்று கூறுதல் காண்க.

கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுத் தலைமை பூண்ட சேரன் செங்குட்டுவனுக்கு, அழும்பில்வேள், வில்லவன் கோதை என்னும் இரு தமிழர் முறையே, அமைச்சனும், படைத் தலைவனுமாயிருந்தனர். உழவு, கைத்தொழில், வாணிகம், அரசு, கல்வி முதலிய பல தொழிலும், தமிழராலேயே (தமிழில்) நடத்தப்பட்டுவந்தன. ஆகையால், பார்ப்பனர் துணை அற்றைத் தமிழர்க்குச் சிறிதும் வேண்டியதாயில்லை.

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்”

(புறம்.9 : 1-5)

என்னும் அடிகள், பார்ப்பனர் மறமும் (வீரமும்) வலிமையும் அற்றவர் என்றும், களங்கமற்றவரென்றும் இரங்கத்தக்கவ ரென்றும், சிலரால் கருதப்பட்டதைக் குறிக்குமேயன்றித் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டதாகக் குறியாது. பார்ப்பனர் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டிருப்பின், மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் சிறையிட்டுக் கடுந்தண்டம் செய்திருக்கமாட்டான். 17ஆம் நூற்றாண்டில்,