பக்கம் எண் :

32ஒப்பியன் மொழிநூல்

வடமலையப்பப் பிள்ளையின் கீழதிகாரியால் நாராயண தீட்சி தரும் சிறை செய்யப்பட்டிருக்கமாட்டார்.

“ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முள”

(புறம். 34: 1-4)

எனவரும் அடிகளும் மேற்கூறிய கருத்தையே தெரிவிக்கும். பார்ப்பார்த் தப்பினவர்க்கும் கழுவாயுளது என்று கூறியிருத் தலைக் கவனிக்க. முரட்டுக் குணமின்றி அமைதியா யிருக்கும் எல்லா உயிர்ப்பொருள்களையும் தமிழர் ஒருதிறமா யெண்ணிக் காப்பர். பூனையையும் கழுதையையும் கொல்வது பெருந்தீவினை என்று கருதப்படுவதை நோக்குக. பார்ப்பனர் அக்காலத்தில் மிகச் சிறிய தொகையினராயும், எளியவராயும், ஆட்சியில் இடம்பெறாதவராயும் இருந்ததினால், தம்மைக் களங்கமற்ற சான்றோராகக் காட்டிக் கொண்டனர்.

பாண்டியன் பல்வேள்வி(யாக)ச் சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் செயலாலும், பல்யானைச் செல்கெழு குட்டுவன் செயலாலும், ஆரிய வேள்விகளை வேட்கும் வழக்கம் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டதை யறியலாம்.

பாலைக் கௌதமனார் என்னும் பார்ப்பனர், பல் யானைச் செல்கெழு குட்டுவன் உதவியால், தாமும் தம் மனைவியும் துறக்கம் (சுவர்க்கம்) புகவேண்டுமென்று, ஒன் பது பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வியில் தம் மனைவியுடன் மறைந்து போனார் என்னும் பதிற்றுப்பத்துச் செய்தி ஆராயத்தக்கது.

பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள்

தமிழ்நாட்டிற் பார்ப்பனருக்குப் பார்ப்பார், ஐயர், அந்த ணர் என மூன்று பெயர்கள் வழங்கி வருகின்றன. இவற்றை ஆராய வேண்டும்.

பார்ப்பார்

பார்ப்பார், அல்லது பார்ப்பனர் என்னும் பெயருக்கு மறை நூல்களைப் பார்ப்பவர் என்பது பொருள். ஆரியர் வருமுன்பே,