வடசொற்களையும் ஆரியக் கருத்துகளையும் தமிழ் நூல்களி லும் வடநாட்டுப் பார்ப்பனரைத் தமிழ்நாட்டிலும் புகுத்து வதற்கும் பார்ப்பனக் குலத்தை உயர்த்துவதற்குமே அங் ஙனம் செய்தனர் என்பது புலனாகும். எ - டு : “அந்தணரின் நல்ல பிறப்பில்லை” என்றார் விளம்பி நாகனார். “அந்தணரில்லிருந்தூ ணின்னாது” என்றார் கபிலர்.1 “ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னி னிதே” என்றார் பூதஞ்சேந்தனார். “.....நன்குணர்வின் நான் மறையாளர் வழிச் செலவும் இம்மூன்றும் மேன்முறையாளர் தொழில்” என்றார் நல்லாதனார். “எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார்”, “பார்ப்பார்.... தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண் ஐம்பூதம் அன்றே கெடும்”, “பார்ப்பார் இடைபோகார்.” “வான்முறை யான்வந்த நான்மறை யாளரை மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல் நூன்முறை யாளர் துணிவு.” “பார்ப்பார்...... இவர்கட்காற்ற வழிவிலங்கினாரே பிறப் பினுள் போற்றி எனப்படுவார்”, “பசுக்கொடுப்பின் பார்ப்பார் கைக்2 கொள்ளாரே”. “தலைஇய நற்கருமம் செய்யுங்கால் என்றும் 3புலையர்வாய் நாட்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா அந்தணர்வாய் நாட்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல் என்றும் பிழைப்பதில்லை” | (ஆசாரக். 92) |
என்றார் பெருவாயின் முள்ளியார். இங்ஙனம், தமிழில் சில நூல்களை வரைந்து தாங்க ளும் தமிழ்ப் பற்றுடையவர் என்று காட்டிக்கொண்டு, வட மொழியையும் ஆரிய வரண வொழுக்கத்தையும் தமிழ் நாட்டிற் புகுத்துவது ஆரியர் தொன்றுதொட்டுக் கையாண்டு வரும் வலக்காரங் (தந்திரம்)களில் ஒன்றாகும்.
1. சில காரணங்களையிட்டு, இவர் பாரியைப் பாடியவரினின்றும் வேறானவராக எண்ணப்படுகிறார். 2. பார்ப்பார்கை = பார்ப்பாரின் கையினின்று. 3. புலையர் = வள்ளுவர்.
|