பக்கம் எண் :

முன்னுரை 43

ஆரியரை உயர்த்திக் கூறியுள்ள சில தமிழரும் உளர். அவர் அறியாமையும் தந்நலமுங்கொண்ட குலக்கேடராத லின், அவர் செய்தி ஈண்டாராய்ச்சிக்குரியதன்று.

சிவனியரும்1 திருமாலியருமான இருசார் பார்ப்பனருள், திருமாலியரே2 தமிழுக்கும் தமிழர்க்கும் சிறந்தவராவர். திருமாலியர் தனித் தமிழரான நம்மாழ்வாரை ஆழ்வார் தலை வராக்கினர்; பறையரான திருப்பாணாழ்வாரைத் தொழாசிரியர் (அர்ச்சகர்) தோள்மேல் தூக்கித் திருவரங்கம் கோயிற்குள் கொண்டு போயினர்; நாலாயிர திவ்வியப் பனுவலைத் திரா விட மறையாகக் கொண்டனர்.3

சைவரோ, பார்ப்பாரான திருஞானசம்பந்தரை அடியார் தலைவராக்கினர்; தில்லையிற் சிவவுருவைக் கண்டு வழிபடப் பித்துக் கொண்ட, சிறந்த அடியாரான நந்தனார் என்னும் பறையரைச் சுட்டெரித்தனர்; தேவாரத்தை மறையாகக்கொள்ளாது, ஆரிய மந்திர வழிபாட்டு முடிவின்பின் ஓதுவிக்கின்றனர்.

பார்ப்பனர் தமிழரை வென்ற வகை

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டு களாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்டொகையில் நூற்றுக்கு மூவராகவேயுள்ளனர். முதன்முதல் தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரே யாவர். போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரிகத்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினா லேயே. அவ் வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ்நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறு கூட்டம், ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப் பற்றலாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப் போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத்திலேயே இல்லை.


1. ருமால்-விஷ்ணு;திருமாலியம்-வைஷ்ணவம்;திருமாலியர்-வைஷ்ணவர்.

2. வடகலையார் தென்கலையார் என்னும் இருசார் திருமாலியருள், இங்குக் குறிக்கப்பட்டவர் தென்கலையார்.

3. தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கின்ற ஒரேயொரு பார்ப்பனரும், காஞ்சி பரவத்து ராஜகோபாலாச்சாரியார் என்னும் தென்கலைத் திருமாலியரே.