பல மதத்தாரிருந்ததினாலும், வேந்தன் (இந்திரன்) விழா வில் எல்லாத் தெய்வங்கட்கும் படைப்பு நடந்ததினாலும், சேரன் செங்குட்டுவன் சைவனாயும் அவன் தம்பி இளங் கோவடிகள் சமணராயுமிருந்ததினாலும், அரசர் பல மதக் கோயில் கட்கும் இறையிலிவிட்டதினாலும், பண்டைத் தமிழ் நாட்டில் மதப் பகையுமிருந்த தில்லையென்றறியலாம். (9) வடநாட்டாரை உயர்த்தல் இது பின்னர் விளக்கப்படும். (10) வடநாட்டுக் கதைகளைத் தமிழ்நூல்களிற் புகுத்தல் கற்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, கண்ணகி, திலகவதி, புனிதவதி முதலிய பல தமிழ்ப் பெண்மணிகள் கதைகளிருப்ப வும், அவற்றை விட்டுவிட்டு, நளாயினி, சாவித்திரி முதலிய வட நாட்டுப் பெண்களின் கதைகளையே புத்தகங்களில் வரைவர். இங்ஙனமே, வில்லுக்குச் சிறந்த ஓரியும், கொடைக்குச் சிறந்த குமணனும், நட்பிற்குச் சிறந்த பிசிராந்தையும், உடம் பிறப்பன் பிற்குச் சிறந்த இளங்கோவடிகளும் தமிழப் பொது மக்கட்கு மறைக்கப்பட்டுளர். தமிழரின் சிறந்த தன்மை மதப்பற்று, மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந் தோம்பல், நடுவுநிலை, நன்றியறிவு, மானம், உண்மையுரைத் தல், நுண்ணறிவு முதலியன தமிழர்க்குச் சிறந்த தன்மைக ளாகும். தமிழர் நுண்ணறிவுடையரேனும், தம் உள்ளத்தில் கள்ளமின்மையால், வஞ்சகரை நம்பி எளிதில் ஏமாற்றப்படுப வராவார். இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே மேனாட்டறிஞருட் பலர் வடமொழி நூல்களையே படித்து, அவற்றுட் சொல்லியிருப்பதையெல்லாம் மறைநூற் கூற்றாகக் கொண்டு, ஆரியரே இந்தியாவில் நாகரிகத்தைப் பரப்பினர் என்று கூறுகின்றனர். ஆரியர்க்கு முன்னைய இந்திய நிலைமையையும், தமிழரின் தனி நாகரிகத்தையும், ஆரியரின் ஏமாற்றுத் தன்மையையும் அவர் கவனிக்கிற தில்லை. ரைஸ் டேவிட்ஸ்(Rhys Davids) என்பவர், தமது “புத்த இந்தியா”
|