(Buddhist India) என்னும் நூலின் முகவுரையில், பிராமண நூல்களையே அளவையாகக் கொள்ளுகிறவர்கள் உண்மை யைக் காணமுடியாமையைக் குறிப்பிடுகின்றார். இந்திய நாகரிகம், தமிழ அல்லது திரவிட நாகரிகமே யென்று பின்னர் நூலில் விளக்கப்படுமாயினும் இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூற விரும்புகின்றேன். பார்ப்பனர் தங்களுக்குக் கூறிக்கொள்ளும் உயர்வு களுள், ஊனுண்ணாமையும் ஒன்றாகும். ஆரியர் இந்தியா விற்கு வந்த புதிதில், பலவகை விலங்குகளையும் கொன்று தின்றமைக்கு, அவர்களின் மறைநூலும் அறநூலுமே சான் றாகும். வடமொழியாரியரின் இனத்தினரான மேனாட்டாரிய ரெல்லாம் என்றும் ஊனுண்பவரே. அவரினின்றும் பிரிந்து வந்த இந்திய ஆரியர், இங்கு வந்த பிறகே திரவிடரைப் பின்பற்றி, ஊனுண்பதை ஒருவாறு நிறுத்தினர். இன்றும் வட நாட்டுப் பார்ப்பனர் ஊனுண்பதை முற்றும் ஒழிக்கவில்லை. முட்டையும் மீனும் அவர்க்கு மரக்கறியின் பாற்பட்டன வாகும். தென்னாட்டுப் பார்ப்பனரும், வேள்வியில் விலங்கு களைக் கொன்றுண்ணலாம் என்னும் கொள்கையுடையவரே; மேலும், தட்பவெப்பநிலை வேறுபட்டவிடத்தும், நோயுற்ற விடத்தும் பெரும்பாலும் ஊனுண்ணும் நிலையினரே. சைவ வேளாளரென்னுந் தமிழரோ, உயிர்க்கிறுதிவரினும் ஊனுண் ணார். சைவ மதத்தில் ஊனுண்ணாமை ஓர் அறமாக விதிக்கப்பட்டிருத்தல் பற்றி, சைவம் என்னும் மதப்பெயருங் கூட ஊனுண்ணாமையைக் குறிப்பதாகும். சைவாள் என்றும், சைவர் என்றும் இன்றும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர் தனித் தமிழரே. பார்ப்பனர் முன்காலத்தில் ஊனுண்டமைக்கு இரு சான்றுகள் தருகின்றேன்: (1) அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது, வில்ல வன் சமைத்தளித்த ஆட்டிறைச்சியை உண்டார். (2) கபிலர் தாம் ஊனுண்டதைப் பின்வரும் புற நானூற்றுச் செய்யுளில், தாமே குறிக்கின்றார்: “புலவு நாற்றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது |
|