பக்கம் எண் :

முன்னுரை 55

பிரியம்-விருப்பம்
பஞ்சேந்திரியம்-ஐம்புலன்
பத்திரம்-தாள் (இதழ்)
பத்திரிகை-தாளிகை
பத்தினி-கற்புடையாள்
பதார்த்தம்-பண்டம் (கறி)
பதிவிரதை-குலமகள் (கற்புடையாள்)
பந்து-இனம்
பரம்பரை-தலைமுறை
பரிகாசம்-நகையாடல்
பரியந்தம்-வரை
பக்ஷி-பறவை (புள்)
பாத்திரம்-ஏனம் (தகுதி)
பார்வதி-மலைமகள்
பாவம்-தீவினை
பானம்-குடிப்பு (குடிநீர்)
பாஷை-மொழி
பிச்சை-ஐயம்
பிச்சைக்காரன்-இரப்போன்
பிசாசு-பேய்
பிரகாசம்-பேரொளி
பிரகாரம்-படி
பிரசங்கம்-சொற்பொழிவு
பிரசவம்-பிள்ளைப்பேறு
பிரசுரம்-வெளியீடு
பிரத்திக்ஷணம்-கண்கூடு
பிரதக்ஷிணம்-வலஞ்செய்தல்
பிரயாசம்-முயற்சி
பிரயாணம்-வழிப்போக்கு
பிரயாணி-வழிப்போக்கன்
பிரேதம்-பிணம்
புண்ணியம்-நல்வினை (அறப்பயன்)
புத்தி-மதி
புத்திமதி-மதியுரை
புருஷன்-ஆடவன்
புஷ்டி-தடிப்பு (சதைப்பிடிப்பு)
புஷ்பம்-பூ
புஷ்பவதியாதல்-முதுக்குறைதல் (பூப்படைதல்)
பூமி-ஞாலம், நிலம்
பூர்வீகம்-பழைமை
பூரணசந்திரன்-முழுமதி
பூஜை-வழிபாடு
போதி-கற்பி, நுவல்
போஜனம்-சாப்பாடு
போஷி-ஊட்டு
பௌரணை-நிறைமதி
மத்தி-நடு
மத்தியானம்-நண்பகல் (உச்சிவேளை)
மயானம்-சுடுகாடு, சுடலை
மரியாதை-மதிப்பு
மாமிசம்-இறைச்சி
மார்க்கம்-வழி
மிருகம்-விலங்கு
முக்தி-விடுதலை
முகஸ்துதி-முகமன்
மூர்க்கன்-முரடன்
மைத்துனன்-அத்தான் (கொழுந்தன்), அளியன்
மோசம்-கேடு
மோக்ஷம்-வீடு, பேரின்பம்
யதார்த்தம்-உண்மை
யமன்-கூற்றுவன்
யஜமான்-தலைவன் (ஆண்டான்)
யாகம்-வேள்வி
யோக்கியம்-தகுதி
யோசி-எண்
ரகசியம்-மறைபொருள், மருமம்
ரசம்-சாறு