பக்கம் எண் :

56ஒப்பியன் மொழிநூல்

ரணம்-புண்
ரத்தினம்-மணி
ரதம்-தேர்
ராசி-ஓரை
ருசி-சுவை
ரோமம்-மயிர்
லஜ்ஜை-வெட்கம்
லக்ஷ்மி-திருமகள்
லாபம்-ஊதியம்
லோபம்-இவறன்மை
லோபி-இவறி (கஞ்சன், பிசிரி)
வசனம்-உரைநடை
வமிசம்-மரபு
வயசு-அகவை
வர்க்கம்-இனம்
வர்த்தகம்-வணிகம்
வருஷம்-ஆண்டு
வாத்தியம்-இயம்
வாயு-வளி
வார்த்தை-சொல்
விகடம்-பகடி
விசுவாசம்-நம்பிக்கை
விசனம்-வாட்டம்
விசாரி-வினவு, உசாவு
விசேஷம்-சிறப்பு
வித்தியாசம்-வேறுபாடு
விநோதம்-புதுமை
வியவகாரம்-வழக்கு
வியவசாயம்-பயிர்த்தொழில்
வியாதி-நோய்
வியாபாரம்-பண்டமாற்று
விரதம்-நோன்பு
விரோதம்-பகை
விஸ்தீரணம்-பரப்பு
விஷம்-நஞ்சு
வீரன்-வயவன் (விடலை)
வேசி-விலைமகள்
வேதம்-மறை
வைத்தியம்-மருத்துவம்
ஜயம்-வெற்றி
ஜலதோஷம்-நீர்க்கோவை, தடுப்பு
ஜன்மம்-பிறவி
ஜன்னி-இசிவு
ஜனம்-நரல் (நருள்)
ஜனசங்கியை-குடிமதிப்பு
ஜன மரணம்-பிறப்பிறப்பு
ஜாக்கிரதை-விழிப்பு
ஜாதகம்-பிறப்பியம்
ஜாதி-குலம்
ஜீரணம்-செரிமானம்,
ஜீரணோத்தாரணம்-பழுது பார்ப்பு
ஜீவன்-உயிர்
ஜீவனம்-பிழைப்பு
ஜீவியம்-வாழ்க்கை
ஜோதி-சுடர்
ஜோதிடன்-கணியன்
ஸ்தாபனம்-நிறுவனம்
ஸ்திரீ-பெண்டு
ஸ்தோத்திரி-பராவு
ஸ்நானம்-குளிப்பு
க்ஷணம்-நொடி
க்ஷீணம்-மங்கல்
க்ஷேமம்-ஏமம், நல்வாழ்வு (காப்பு)

இங்ஙனம் நூற்றுக்கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாமை(அனாவசியம்)யாய் வழங்குகின்றன. இவை எங்ஙனம் வந்தன? தமிழர் மொழி வடமொழியன்று. ஆகவே