பக்கம் எண் :

94ஒப்பியன் மொழிநூல்

“தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண்
டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி”

(எழுத்து. 43)

என்னும் நன்னூல் நூற்பாவின் உரையில், 'ஆண்டு' என்ற மிகையானே.... குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளர் எனக்கொள்க” என்று கூறியிருத்தலின், அவ் வழக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்தான் வீழ்ந்த தென அறியலாம்.

தமிழ்நாட்டிற் பல நூற்றாண்டுகட்கு முன்னரே கல்விக் களம் பார்ப்பனர் கைப்பட்டுவிட்டதினாலும், தமிழ் வறள வடமொழியை வளம்படுத்துவதே அவர் கடைப்பிடியாத லாலும், தமிழர் உயர்நிலைக் கல்வியை இழந்துவிட்டதினா லும் தமிழ் எழுத்துமுறை கவனிப்பாரின்றிச் சீர்கேடடைந்தது.

புள்ளிபெறும் என்பதினாலேயே, குற்றுகரத்தை மெய் யீறாகக் கொள்ளின், மொழிமரபில்,

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”

(15)

“எகர ஒகரத் தியற்கையும் அற்றே”

(16)

என்று தொல்காப்பியர் கூறியிருப்பதால், எகர ஒகர வீறுகளை யும் மெய்யீறாகக் கொள்ளவேண்டும். அங்ஙனம் கொள்ள லாகாமை வெளிப்படை.

இனி, கண்+யாது=கண்ணியாது என்பதுபோன்றே, சுக்கு+யாது=சுக்கியாது என்று புணர்வதால், குற்றியலுகரம் மெய்யீறாகக் கொள்ளப்படுமென்றார் ரெட்டியார். அங்ஙன மாயின், கதவு + யாது = கதவியாது என்று முற்றுகரமும் புணர்வதால், அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு, உகரவுயிரே தமிழுக்கில்லை யென்றாகும். ஆகையால், அவர் கூற்று உண்மையன்மை யறிக.

வடமொழியில், புரிக், விராட், சத் என்று வல்லின மெய்யீறு வந்திருப்பதுபற்றித் தமிழிலும் அவ்வாறே வரு மென்றும், குற்றியலுகரமெல்லாம் மெய்யீறேயென்றும் கொள் வது தமிழ் முறைக்கு நேர்மாறாகும். குற்றியலுகர மெல்லாம் மெய்யீறாயின், எனக்கு, பாய்ச்சு, கட்டு (கண் + து), தாட்டு (தாள் + து), வாழ்த்து,