பக்கம் எண் :

மொழிநூல்95

பிடிப்பு, கொட்பு, திரும்பு, பாற்று (பால் + து), அற்று (அன் + து) என்பவற்றின் உண்மையான வடிவங்கள், முறையே, எனக்க், பாய்ச்ச், கட்ட், தாட்ட், வாழ்த்த், பிடிப்ப், கொட்ப், திரும்ப், பாற்ற், அற்ற் என்பன வாதல்வேண்டும். அங்ஙன மாகாமை அறிக.

தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டிருப்பின், “.....குற்றியலுகரம்... எழுத்தோ ரன்ன” என்று, அதை ஓர் தனியெழுத்தாகக் கூறியிரார்.

குற்றியலுகரமாவது, இடத்தினாலும் சார்பினாலும் குறுகியும் சிறிது வேறுபட்டும் ஒலிக்கும் இயல்பான உகரமே. குற்றியலுகரம் வருமிடத்தில் முற்றுகரமிருக்கமுடியாது. வல்லின மெய்கள், மெல்லின மெய்யும் இடையின மெய்யும் போலன்றிச் சிக்கெனக் காற்றைத் தடுத்தலான் (checks of breath), நீரோட்டம் கல்லில்முட்டி வேகந்தணிகிறதுபோல, ஓசையானது தடைப்பட்டு, ஈற்றிலுள்ள உகரம் குன்றியொலிக் கின்றதெனக் கொள்க.

(3) பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன என்பது.

“ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்

அப்பதி னொன்றே புள்ளி யிறுதி”

(45)

என்று, சொல்லீற்று மெய்களைப் பதினொன்றேயென்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆதலால், வல்லின மெய் சொல்லீறாமெனக் கொள்ள எள்ள ளவும் இடமில்லை.

உரிஞ், பொருந் முதலிய சொற்களும், மண், மீன் முதலிய சொற்களும் உகரம்பெற்று வழங்குவதை, வல்லின மெய்யீறுகள் உகரம்பெற்றுத் தமிழில் வழங்குவதாகத் தாம் கொண்ட கொள்கைக்குச் சான்றாக எடுத்துக்காட்டினார் ரெட்டியார்.

உரிஞு, பொருநு, மண்ணு, மீனு என்று முதலில் உகர வீறாயிருந்த சொற்கள், பிற்காலத்தில் உகரவீறு கெட்டு உரிஞ், பொருந், மண், மீன் என வழங்கினவேயன்றி, முத லில் மெய்யீறாயிருந்த சொற்கள் பிற்காலத்தில் உகரவீறு பெற்று வழங்கினவல்ல.