|
தொள் - தோள் = பொருந்து, தொடு, துளை,
தோண்டு. தோள் - தோய் = பொருந்து, தொடு, திரள். க
கேள்வியால் தோட்கப் படாத செவிக (குறள். 418).
தோள் = தொடும் உறுப்பான கை, கையின்
மேற்பகுதியான புயம். தோள் - தோணி = மரத்தில்
தோண்டப்பட்ட ஓடம் (dug
- out). தோள் - தோண்டு = பொருந்து,
தொடு, கில். தோண்டு - நோண்டு = தொடு, கைவை, கில்.
தோண்டு - தீண்டு - தீட்டு.
L. tango, to touch.
தோண்டு - தேண்டு - தேடு - நேடு.
தொள் - சொள் - சொள்ளை = துளையுள்ளது
(கூடு), பதர், குற்றம். சொள் + து - சொண்டு =
துளையுள்ளது, பதர். சொள் + தை - சொட்டை - சொத்தை
- சூத்தை. சொட்டை = துளையுள்ளது. பதர், குற்றம்.
சொத்தை = பதர், துளையுள்ள பல்.
புள் = முன்னாற் செல், தள், பொருந்து,
துளை.
L. pulso, Fr. pousser, E. push, to
thrust.
புள் = வானைத் துளைத்துச் செல்லும்
பறவை, பறவைபோற் செல்லும் குச்சு.
A.S. fugel, Ice. fugl, E. fowl, Ger. vogel,
a bird.
புள் + ஆம் + குச்சு - புள்ளாங் குச்சு.
புள் - புழு = மரத்தைத் துளைப்பது.
புள் - புடை(வி.) = முன்னுக்குத் தள்,
துருத்து, வீங்கு.
Cf. Gael. bolg, A.S. belgan, E. bulge,
to swell out.
புள் - புணர் = பொருந்து. புள் - புண் - பூண்
- பூட்டு. புள் - புல் = பொருந்து, தழுவு. புல்லி - புலி =
முன்கால்களால் தழுவும் விலங்கு. புல் - புலம் =
பொருளொடு பொருந்தும் அறிவு, அறிவுறுப்பு, அறிவுநூல்.
புலம் - புலன் = பொருளொடு பொருந்தும் அறிவு,
அறிவுறுப்பு, அறிவுநூல். புலம் = புலன். புல் - புரை= (வி.)
பொருந்து, ஒப்பாகு; (பெ.) ஒப்பு, புரைய = போல
(உவமவுருபு). புரையோர் = ஒத்தோர், உவமை கூறத்தக்க
பெரியோர். "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்
காலை"(தொல். 1222) என்றதனால் உயர்ந்த பொருளே
உவமை கொள்ளப்படுவது மரபு எனவறிக.
Fr. pair,O.Fr., L. par, paris, equal, E.
peer, an equal, a noble man.
"உருஉட் காகும் புரையுயர் பாகும்"
(தொல்.
784)
புள் - புகு = துளைக்குட் செல், உட்செல்.
புக + விடு - புகட்டு - போட்டு. புகு + அல் - புகல் = புகும்
அடைக்கலம், சாக்கு (போக்கு). புகலி =
வெள்ளக்காலத்தில் அடைக்கலமாயிருந்த சீகாழி.
புகு - புகை.
Cf. A.S. smoca, E. smoke,Low Ger., Dut. smook.
புள் - புல் = துளை, தோண்டு. புல் =
உட்டுளையுள்ள தாவரம்.
|