பக்கம் எண் :

பின்னிணைப்பு37

"புறக்கா ழனவே புல்லென மொழிப" (தொல். மரபு. 481)

புல் - புலம் = தோண்டப்பட்ட வயல், நிலம், இடம். புள் - புண்.

புல் - புரை = துளை, பொய், குற்றம்.

Fr., L.porus, Gk. poros, E. pore, an opening.

புள் = துளை, தோண்டு, வெட்டு, கொத்து, குத்து. புள் + இ - புள்ளி = குத்து (a point), சிறு வட்டக்குறி, புள்ளியால் குறிக்கப்படும் ஆள். புள்ளிக்கணக்கு = குறியிட்டுக் கணிக்கும் கணக்கு. புள்ளிக்காரன் = புள்ளி குத்தப்பட்ட குற்றவாளி.

Cf.E. bull, a sealed edict of the pope, L. bulla,a knob, anything rounded by art; later, a leaden seal, E. bill, an account of money, a draft of a proposed law. (Lit.). a sealed paper, from Low, L. billa - bulla, a seal.

புள் - (புகு) - புகர் - போர் = புள்ளி, குற்றம். புள் - புட்டு - புட்டா = புள்ளி. புள் - புனை = பொருத்து, அலங்கரி.

புள் - புழை - புடை- புதை = உட்டுளை, உட்குவிவு. புழை - பூழ் - பூழை. புழை = துளை, வாசல். புழை + கடை = வீட்டின் பின்புறமுள்ள சிறுவாசல்.

Cf. A.S., L. portus, E. port, a gate, from L. porus, an opening. E. door, on opening. ரiH = E. barrel.

புழை - புழல் - புடல். புழல் - புழலை - புடலை. புடை - புடங்கு. புதை - A.S.byrgan, to bury;Ger. bergen, to hide; E. bury.

த - ர போலி. எ-டு: விதை - விரை. புதை - புதையல். புதை - புதல் - புதர்.

Cf. Low., L. boscus, Fr. bois, Ger. busch, M.E. busk, busch; E. bush.

புதை - பொதி - பொதுள் - பொதும்பு - பொதும்பர். பொதி - பொத்து = மூடு, பொருத்து. பொத்திப்பிடி, பொல்லம் பொத்து என்னும் வழக்குகளை நோக்குக.

பொத்து - M.E. botech, Low Ger. patschen, E. patch.

புள் - பொள் = பொருந்து, துளை, குற்றம்.

A.S. bor, Ger. bohren, E.bore, L.foro, to make a hole, E. bull, a blunder in speech.

பொள் - பொளி = துளை, வெட்டு. பொளி - பொழி = பொள்ளப்பட்ட நீர்க்கலம் போலப் பெருமழை பெய், பெருமழை போலச் சொற்பெருக்கு நிகழ்த்து அல்லது மிகுதியாகக் கொடு. பொள் - பொசி = துளைவழி கசி. பொள் - பொண்டான் = எலி பொத்துக் கொண்டுவரும் வளை.

பொள் - போழ் - போழ்து - பொழுது - போது. போழ் = (வி.) துளை, வெட்டு, பிள் ; (பெ.) பிளவு, துண்டு, தகடு. பொழுது = இருளைப் பிளக்கும் சூரியன், சூரியனால் அளந்தறியப்படும் காலம், வேளை.