பக்கம் எண் :

14செந்தமிழ்க் காஞ்சி

New Page 1
   மொழிநூலே யறியாதார் முற்றும் - சொல்லும்
   முறையற்ற சொற்களுக் குரையுண்டோ சற்றும்.
 
   இயற்கையாம் தென்மொழித் தன்மை - மிகச்
   செயற்கையாய்ச் செய்ததே ஆரியத் தன்மை.
 
   இந்திய மொழியெல்லாம் ஒன்றே - என்றால்
   இந்தியர்க் கூண்மண சம்பந்த முண்டே
 
   அண்மை இந்திஎளி தென்றீர் - அந்த
   ஆங்கில ஒலிகளோ எளியன கண்டீர்.
 
   ஆங்கிலம் போலவே இந்தி - ஒரு
   ஆரியக் கிளைமொழி யானது சிந்தி.
 
   உடன்பிறந் தார்க்கெல்லாம் அன்போ - நம
   துடன்பிறந் தேகொல்லும் நோயொடு நண்போ?
 
   தமிழ்நாடோ ஒருசிறு பாகம் - என்று
   தள்ளாதீர் பாரதத் தலையது வாகும்.
 
   பலர்இந்தி பேசுவ தாலே - தமிழ்ச்
   சிலர்அதைத் கற்றறிடுஞ் சிரமமுங் காலோ.
 
   ஓநாயாட் டுக்குட்டி நியாயம் - அறி
   வுள்ளவ ரெல்லாரும் தள்ளுவர் மாதோ.
 
   ஆரியங் கலப்பதி னாலே - முற்றும்
   அழிந்துபோம் தமிழ்இதை அறிவீர்இக் காலே.
 
   தமிழென்றே ஒருமொழி யுண்டோ - என்று
   சந்தேகிக் குங்காலம் சமீபமா யுண்டே.
 
   தமிழாஉன் மடிகட்டிக் கொண்டு - இன்று
   தற்காத்துக் கொள்உன்றன் தாய்மொழி நன்று.