செந்தமிழ்க்
கிந்தியின் தொந்தம் - மிகச் |
சிறையற்ற
நரியாட்டிற் குள்ளசம் பந்தம். |
|
இந்தியி
னால்வருந் தீமை - இன்று |
இயம்புவேன்
கேள்வெறுப் பேதுமில் லாமை. |
|
செந்தமிழ்
ஒலிகளோ எளிய - மிகச் |
செயற்கையாம்
இந்தியின் ஒலிகளோ வலிய. |
|
இரண்டுமொன்
றாய்இசைந் தாலோ - தமிழ் |
எழுத்துக
ளின்ஒலி இலகா பின்மாலே. |
|
முந்தியே
தென்சொற்கள் மறையும் - இந்தி |
முக்கிய மாய்விடின் மிகவின்னுங் குறையும். |
|
கலந்திடு
முன்னமே கெட்ட - தூய்மை |
கலந்தால்
இந்தி தமிழ்கெடுவது முற்ற. |
|
முன்னமே
வடமொழி மூலம் - காட்டி |
முத்தமிழ்
கெடுத்தவர்க் கொத்தது காலம். |
|
எத்துணை
யோதமிழ்ச் சொற்கள் - பலர் |
நத்தும்
பாஷையாம் சமஸ்கிரு தத்துள். |
|
வடமொழி
கடன்கொள்ளா தென்றார் - ஏனை |
வையக
மொழியெல்லாம் வடமொழி யென்றார். |