பார்ப்பனரே! பார்ப்பனரே! பழந்தமிழ்ப் பார்ப்பனரே! |
பார்த்திடுக
கண்தமிழ்மேல் பாராதீர்ஓர் கையதன்மேல் |
|
ஆண்டுகள்
ஐயாயிரமாய் அருந்தமிழே தாய்மொழியாய் |
வேண்டுவவெல்
லாமொருங்கே வேண்டியாங்குப் பெற்றீரதனால் |
|
அகத்தியரே முதலாக
ஆரியரே தமிழ்வளர்த்தார் |
மகத்துவமாய்ச்
சங்கங்களில் வகித்துவந்தார் தலைமையுமே |
|
சூரிய நாராயணமா
சாஸ்திரியார் காலம்வரை |
ஆரியர்க்
கிருந்ததமிழ் அன்பினுக்கோர் அளவுண்டோ? |
|
வலிந்துதென்
சொற்கள் கலைகள் வடமொழியாய்க் காட்டுகின்றீர் |
மெலிந்த சமயங்கண்டு
தமிழ்மேற் சென்றாணை செலுத்துவதோ |
|
நாடுமக்குத் தமிழ்நாடு
நவிலும் தமிழே தாய்மொழியாம் |
நீடு குலமுந் திரவிடமே
நினையாதீர் வேறாக உமை |
|
தாய்மொழியாம்
தமிழ்மொழியைத் தயவுசெய்து காத்திடுவீர் |
வாய்மை இந்திக்
கட்டாயம் வரினே தமிழோ கெட்டுவிடும். |