பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 11

8

8. தமிழ்நூல்கள்

நொண்டிச் சிந்து

   வெண்பா புகழேந்தி - மிகவும்
   வியந்திடும் பரணிக்குச் சயங்கொண்டான்
 
   விருத்தம் உயர்கம்பன் - விரித்த
   விழுமிய கவிப்பொருட் கொழுமையென்ன
 
   கடுத்தே கவிபாடும் - அந்தக்
   காளமேக வசையுஞ்சி லேடையழகே.
 
   அருண கிரிநாதர் - அடைந்த
   அருட்பொலி வாகும்அவர் திருப்புகழே.
 
   தொல்காப்பிய வழிநூல் - இன்று
   தொன்மைபெற்ற நூல்களிலே முன்மைபெற்றதே.
 
   தெய்வத் திருக்குறளே - எல்லாத்
   தேயத்தாரும் போற்றும் நடுத்திற நீதி.
 
   திருவா சகத்திற்கே - உருகார்
   ஒருவா சகத்திற்குமே உருகாரே.
 
   ஆல்வேல் பற்குறுதி - சால
   அழகிய நாலிரண்டு மொழிக்குறுதி.
 
   கதியே கதியென்றார் - முன்னைக்
   கதியே கம்பருடன் மெய்த்திருவள்ளுவர்
 
   சிலப்பதி காரமென்னும் - காவியம்
   செப்பிய ஒவ்வொரு சொல்லும் கொப்பின் தெளிதேன்.
 
   சிந்தா மணிச்செய்யுள் - புலவர்
   சிந்தையுள்ள குறையெல்லாம் தந்து நிறைக்கும்.
 
   மணிமே கலைநூலே - தமிழின்
   மாகலை மீதேயணியும் மேகலையாகும்.
 
   தேனார் திருக்கோவை - பலர்தம்
   திறத்தினுக் கேற்றபடி தெரியக் காண்பார்
 
   தேவாரத் திவ்யப் - பதிகம்
   செழிய பக்திச் சுவையை வழியவூட்டும்
 
   கற்றோர் புகழ்ந்தேத்தும் - அகநூற்
   கலித்தொகை தீர்க்கும்மணக் கலித்தொகையே.