பக்கம் எண் :

20செந்தமிழ்க் காஞ்சி

   தழைக்கவோநம் நாடுஇந்தத் தாறுமாறு செய்கிறீர்.
   குளிக்கப் போய்ப்பின் சேற்றைப்பூசிக் கொண்டதைப்போல் அடிமையை
   ஒளிக்கவகை தேடிமற்றும் ஓர்அடிமை யாவதோ?
   அறுப்பவனை நம்புகிற ஆட்டைப்போலும் பேதைகாள்!
   பொறுப்புடன் உமக்குச் சொல்லும் பொன்னுரையைக் கேளுங்கள்.

19. தமிழுக்கும் ஹிந்திக்கும் உள்ள தாரதம்மியம்

'பழனி மாமலை வாழும்' என்ற மெட்டு

   அருந்தமிழுக்கு ஹிந்தி ஆமோச மானம்  
   ஆனைக்கும் பூனைக்கும் அறையுப மானம்  
   

2

 
   
   செந்தமிழ் பிறந்தது செப்பொணாப் பழமை  
   இந்திஐந்து நூற்றாண்டே எழுந்தசிற் றிளமை

(அருந்)

   

3

 
   
   இலக்கியம் நிறைந்ததும் இனியசெந் தமிழே  
   இந்தியில் வடமொழி எழுந்திடும் அமுலே

(அருந்)

   

4

 
   
   முத்தமிழ் இலக்கணம் முனிவரை யுருக்கும்  
   எத்தனை ஒழுங்கீனம் இந்தியி லிருக்கும்

(அருந்)

   

5

 
   
   செந்தமிழ் ஒலிகளோ சிறுவர்க்கும் எளிய  
   இந்தியின் ஒலிகளோ இளைப்புற வலிய

(அருந்)

   

6

 
   
   ஏனைய மொழியின்றி இருந்தமிழ் தூய்மை  
   இந்தியென் றொருமொழி இல்லையே வாய்மை

(அருந்)

   

7

 
   
   இந்தியின் துணைதமிழ்க் கிம்மியும் வேண்டா  
   இந்தியில் தமிழ்ச்சொற்கள் எனையவோ ஆண்டார்

(அருந்)

   

8

 
   
   தென்மொழிக் கருத்துகள் தேவரும் புகழ்வர்  
   தேவமொழிக் கருத்தை யாவரும் இகழ்வர்.

(அருந்)