பல்லவி |
|
பாண்டியன்
பஃறுளி நாட்டுத் தமிழையே |
பலமுடன் நாட்டு |
வேண்டிய
வேறுசொற் கூட்டு வேண்டாத |
விலக்கியே ஓட்டு |
|
உரைப்பாட்டு |
|
இந்தியாவில்
ஆரிய மொழிகளெல்லாம் |
எழுந்தவை சமஸ்கிருதத் தினின்றே |
இந்தியைக்
கட்டாயமாக்கின் எமதுடன் பிறப்பென்று |
இட்டமாயவை யேற்குமன்றே |
|
பல்லவி |
|
தென்னாட்டுத்
திராவிட மொழிகள் - இந்தியினால் |
திறம்பிடும்
வழிகள். |
|
உரைப்பாட்டு |
|
திராவிட
மொழிகளிலே தெலுங்குமலை யாளமிலை |
தேவ
மொழியால் வளருமன்றே |
திராட
விடமின்றித் தமிழே விமரிசையாய் வளர்ந்து |
வேறு
மொழியாய் வளரும் நன்றே. |
|
பல்லவி |
|
இந்திக்கு
மகமதியர் துணையே - உருததை |
மானுமெனுந்
துணையே. |
|
உரைப்பாட்டு |
|
மானத்திலும்
பாஷாபி மானத்திலும் வங்காளரைப் பின்பற்றுவாயே |
ஞானத்தி
லும்சுயா தீனத்திலும் நன்றாகத் தமிழ்வளர்ப் பாயே. (பாண்டி) |