ப. |
|
|
|
திருக்குறள்
படித்தல் வேண்டும் - தென்னோரே யாண்டும் |
|
|
|
து.ப. |
|
|
|
இருக்கிற பகல்தொறும் இரண்டொரு குறள்களே |
|
இசையினும்
தெளிபொருள் இலகுற மீண்டும் மீண்டும் |
(திருக்) |
|
|
உ.1 |
|
|
|
பிறப்பினிற்
சிறப்பில்லை பெருமையுஞ் சிறுமையும் |
|
பேணுந்
தொழிலொழுக்கம் பெற்றியாலே விளைக்கும் |
|
இறப்புவரை
தமிழன் இழிவுற வகுத்தின்றும் |
|
ஏமாற்றும்
ஆரியனை ஈமேற்றவே முளைக்கும் |
(திருக்) |
|
|
2 |
|
|
|
இல்லறம்
நல்லறமாய் இயற்றித்தம் வாழ்நாளெல்லாம் |
|
இன்ப
மைந்தும் ஒருங்கே இனிது நுகர்ந்து நன்றே |
|
தொல்லுல
காண்ட சேரசோழ பாண்டியர் வழி |
|
தோன்றிய
தமிழரே துரைத்தனஞ் செய்ய இன்றே |
(திருக்) |
|
|
3 |
|
|
|
ஆயிரத்து
முந்நூற்று முப்பதருங் குறளும் |
|
பாயிரத்தோடு
நன்றாய்ப் படித்தபின்னே யொருக்கப் |
|
போயொருத்தர் வாய்க்கேட்கப் புதிய பொருளுமுண்டோ |
|
வாயறப்
பலரையும் வணக்கிய வீற்றிருக்க(த்) |
(திருக்) |