பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 41

7

7

 
   
   நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம்  
   ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம்

(தமிழா)

   

8

 
   
   அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி செய்தானாம்  
   அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிரம் விளைநன் செய்தானாம்

(தமிழா)

   

9

 
   
   நானில மெங்குந் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு  
   நாகரி கம்நற் பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு

(தமிழா)

   

5. திருவள்ளுவர் திருத்தொண்டு

பண் - பந்துவராளி தாளம் - முன்னை

ப.

 
   
   தென்னாட ருய்யவந்த திருவள்ளுவர்  
   தெரிந்துமெய்ப் பொருளெல்லாந் திடங்கொள்ளுவர்  
   

து. ப.

 
   
   பன்னாடரும் இன்புறும்படி யுள்ளுவர் - அதன்  
   பாங்காகப் பொதுமறைப் பயன்தெள்ளுவர்

(தென்)

   

உ. 1

 
   
   மண்ணோ ரெல்லாரும் ஒரேவகை பிறந்தார் - அவர்  
   பண்ணா ருயர்வினையாற் பதஞ்சிறந்தார்  
   தண்ணா ரருளினார் அந்தணர் துறந்தார் - என்று  
   கண்ணாரத் தமிழனின் கண்திறந்தார்

(தென்)

   

2

 
   
   ஒழுக்க முடைமையாகும் உயர்குலமே - என்றும்  
   ஓதும் வேதத்தா லில்லை ஒருநலமே  
   இழுக்க முடையானெனின் இழிகுலமே - என்றார்  
   ஏதுகொண் டெதிர்க்கவே இடமிலமே

(தென்)