பக்கம் எண் :

44செந்தமிழ்க் காஞ்சி

5

5

 
   
   நிறம்புனை யுடையும் நிலைபெறு வாழ்வும்  
      நிலந்தொறும் பலதிற மெனினும்  
   அறம்பொரு ளின்பும் அவற்றொடு வீடும்  
      அனைத்துல குங்கொளும் அளவினும்

(திருக்)

8. நக்கீரன்

    பண் - ‘காப்பி‘                         தாளம் - இரட்டை (சாப்பு)

ப.

 
   
   நல்ல தமிழன் நக்கீரன் - அவன்  
   நானிலத் தில்ஒரு நாவன்மைப் பேரன்

(நல்ல)

   

து.ப.

 
   
   சொல்லும் பொருளொன்றும் சோராத கூரன்  
   சூலன்வந் தாலும்பின் தோலாத சூரன்

(நல்ல)

   

உ.

 
   
   தெள்ளும் பொருள்தன்னைத் தேரதி காரன்  
   தேறாத இறைவன்பேர் நூலுரை காரன்  
   எள்ளுங்கொண் டானன்றே இறக்கச்செய் சீரன்  
   என்றாலும் பின்மீள இரக்கங்கொள் நீரன்

(நல்ல)

9. பரிதிமாற் கலைஞன்

    பண் - ‘வசந்தா‘ தாளம் - முன்னை

ப.

 
   
   பரிதிமாற் கலைஞன் பயன்முதிர் இளைஞன்  
   

து.ப.

 
   
   விரிதமிழ் வலைஞன் விழுமுது விளைஞன்

(பரிதி)