பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 45

உ.

 
   
   தனித்தமிழ் வித்துத் தானே விதைத்து  
   தண்ணீ ருகுத்துத் தணந்த புறத்து  
   இனித்த கனித்து எனும்மரம் கொத்து  
   ஈயும் நிலத்து இந்தக் காலத்து (பரிதி)

10. மறைமலையடிகள் மாண்பு

    பண் - ‘கலியாணி‘ தாளம் - ஈரொற்று (ரூபகம்)

ப.

 
   
   தவத்திரு மறைமலை யடிகள் தமிழே தமிழன் உயரும் படிகள்  
   

து. ப.

 
   
   தகைத்து நிற்குங் கொடுமுடிகள் தகர்ந்து விழுமே தவிடு பொடிகள்  
      சிவத்திரு வருள்கொடு மானச்  
   செந்தமிழ் விடுதலை காணச்  
      சவக்கடு வடமொழி யான  
   சடங்கொடு வழிபடல் நாணத்

(தவத்)

   

உ.1

 
   
   தமிழொடு வடமொழியுங் கற்றுத் தகுபுலமை யாங்கிலமும் உற்றுத்  
   தருக்கொடு செருக்கறவே யற்றுத் தனித்தமிழ்த் திறம்கனியப் பெற்று  
   
   ஆன்றவிந் தடங்கிய கொள்கை  
      சான்றெதிர் மடங்கிட வெல்கை  
   ஏன்றரு நூல்களை நல்கை  
      எதிரியும் வாழ்ந்திட வுள்கைத்

(தவத்)