பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 61

New Page 1

உ. 1

 
   
   நள்ளிரவிலே சென்று தில்லை யம்பலத்திலே  
   நானிருந்தேன் நெஞ்சமும் நள் நள் நள் என்றே  
   தெள்ளிய ஒலியொன்று தேனூறத் திணிந்ததே  
   தீந்தமிழ் 'உலகெலாம்' தெள் தெள் தெள் என்றே

(நல்ல)

   

2

 
   
   வைகறை யிலேயொரு மெய்யெனக் கனவினில்  
   வந்தனள் தமிழ்மக்கள் வெல் வெல் வெல் என்றே  
   வல்லியர் சூழநின்றோர் வாயில்லா மகளையே  
   வரைந்தனர் அணைநின்று செல் செல் செல் என்றே

(நல்ல)

29. தமிழ் வெற்றி முரசு

'ரத்ன மகுட ரஞ்சித பூசணி' என்ற மெட்டு

1

 
   
   வள்ளுவன் யானைமேலேறி வலம்வந்து  
   வார்முரசம் இடிபோல முழங்கவே அறை அறை அறை  
   தெள்ளுந் தமிழ்க்கொரு தீங்குமில்லை யினித்  
   தீர்ந்தது சிறையென் றறை அறை

(வள்ளு)

   
   நாட்டிலுள்ள திருக்கோயில் களிலெல்லாம்  
      நல்ல தமிழிலே புல்லி வழிபட அறை அறை அறை  
   கூட்டுறவாய் ஒன்றுகூடி யெல்லாருமே  
      கும்பிட வாருமென் றறை அறை

(வள்ளு)

   

3

 
   
   மண்ணுல கெங்கணும் மன்னரொடு கூடி  
      மாட்சிமை யாய்த்தமிழ் வீற்றிருக்கு மென்றே அறை அறை அறை  
   உண்மையான வரலாறே யிந்நாட்டினி  
      ஓங்கி வளர்கென அறை அறை

(வள்ளு)