பக்கம் எண் :

62செந்தமிழ்க் காஞ்சி

30

30. தமிழ்வாழ்த்து

    பண் - ‘காப்பி‘                             தாளம் - ஒற்றை

ப.

 
   
   வாழிய வேங்கடந் தென்குமரி  
   வைகிய ஆயிடைச் செந்தமிழே  
   

உ.

 
   
   வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே  
   விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே  
   வேறுபல் நூல்தமிழ் வீறுகவே  
   ஏழிசை நாடகம் எல்லாந் தமிழாக  
   இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக  
   இந்தியும் செல்லுக வந்தவழி

(வாழிய)

31. உலகத் தமிழ்க் கழகம்

'தெண்டனிட்டேன் அடியேன்' என்ற மெட்டு

ப.

 
   
   உலகத் தமிழ்க் கழகம் - உயர்ந்தொழுகும்  
   

து. ப.

 
   
   பலகற் றுயர்ந்துதனிப் பைந்தமிழ்ச் செல்வங்கண்ட  
   அலகற்ற மறைமலை அடிகளைத்தன் மேற்கொண்ட

(உலகத்)

   

உ.

 
   
   குலமுத் தமிழைக் கொல்லுங் கொண்டான்மா ரோடுகூடிக்  
   கோலாலம்பூர் சென்னையிற் குடவரும் வடவரும்  
   பலகுற்றமாய்த் தமிழைப் பழித்த விருளகற்றப்  
   பகலவனெனத் தோன்றிப் பல்கதி ரோடுவரும்

(உலகத்)