1 |
|
உலகத்தமிழ்க்
கழகக்கிளை யுற்றபல மாவட்டங்கள் |
முலமுலெனக்
கிளைகள் மொய்ந்த முதன்மையது முகவையாகும் |
பலகிளையும்
பாங்கா மேனும் படைப்புமுறைத் தலைமை சொல்லின் |
தலைவன்தமிழ்க் குடிமகனே தங்கியதாம் பறம்புக்குடி. |
|
2 |
|
கழக
முதலாட்டைச் சீர்நாள் காணரிய வள்ளுவர்தம் |
பொழுதுகழிந் தீராயிரம் புகலுமிந்த ஆண்டயர்வும் |
பழகுபரி
மேலழகர் பளகறுக்கும் உரைவிழாவும் |
விழுமியவாய் நடக்குமாற்றால் விஞ்சியதாம் பறம்புக்குடி. |