பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 83

12ஆம

12ஆம் பாடம்

தாலாட்டுப் பாட்டு

இது தாய் சொல்வது, நாதநாமக் கிரியையில் நீட்டிப் பாடவேண்டும்.

  ரா ரா ரோ ரா ரா ரோ.....
  ரா ரா ரோ ரா ரா ரோ.....
   
   1. கண்ணே! உறங்கு உறங்கு - என்
     கண்மணி உறங்கு உறங்கு
  பொன்னே! உறங்கு உறங்கு - என்
     பொன்மணி உறங்கு உறங்கு
   
   2. காலுங் கடுத்தே - நான்
     கடுகி வழிநடந்தேன்
  பாலும் கையிலேந்தி - நான்
     பார்த்தகண்ணும் பூத்துப்போச்சு
   
   3. பச்சைக் கிளியே! நீ
     பனிக்கெல்லாம் எங்கிருந்தாய்?
  இச்சித்த தினைக்கதிரை
     ஏக்கமறத் தின்றாயோ?
   
   4. மாடப் புறாவேநீ!
     மழைக்கெல்லாம் எங்கிருந்தாய்!
  காடான காடெல்லாம் - நீ
     கண்டுவரப் போனாயோ?
   
   5. கூவுங் குயிலே! நீ - முன்
  குளிருக்கே எங்கிருந்தாய்?
  மூவா மருந்தே - நான்
     முத்தமிடக் காணேனே.
   
   6. கப்பல் தனித்தேறி - முன்
     கைப்பொருளைத் தேடப்போன
  அப்பன் வரக்காணேன் - என்
     ஆசைக்கிளி நீஉறங்கு.