1. |
சிட்டுக் குருவி முகட்டில் சிறுகூடு |
|
கட்டி யிருக்குது பார் -
அதில் இரண்டு |
|
முட்டை இருந்தன பார். |
|
|
2. |
முட்டை வெடித்தது குஞ்சு பொரித்தது |
|
எட்டி எட்டிப் பார்க்குதே
- இரண்டு கண்ணும் |
|
தட்டித் தட்டிப் பார்க்குதே. |
|
|
3. |
இன்னும் உரோமந்தான்
ஒன்றும் இல்லை நன்றாய்க் |
|
கண்ணும் தெரியவில்லை
- அது தெரிய |
|
இன்னும் சிலநாள்
செல்லும். |
|
|
4. |
தாய்க்குருவி தூரம்போய்த்
தான்இரை தேடி |
|
வாய்க்குள்ளே
வைத்துக்கொண்டு - வந்து குஞ்சுக்கு |
|
வாய்க்குள்ளே வைக்குது
பார். |
|
|
5. |
அந்தப் பக்கத்திலே
தந்தைக் குருவியும் |
|
குந்தி
யிருக்கிறது - இதை நமது |
|
தந்தைக்குச்
சொல்வோம் வாரும். |