19ஆம
19ஆம் பாடம்
கொக்கும் நரியும்

'முத்திநெறி அறியாத'
என்ற மெட்டு
1. |
ஒருஊரில்
ஒருகொக்கும் |
|
ஒருநரியும் இருந்தனவே |
|
ஒருநாளில்
நரிகொக்கை |
|
ஒருவிருந்துக்(கு) அழைத்தது பார் |
|
|
2. |
குறித்த நாளும்
வந்தவுடன் |
|
கொக்குநரி வீட்டுக்குப் போய்ப் |
|
பொறுத்திருந்து
பசிமிகவே |
|
போசனத்தில்
ஆசைவைக்க |
|
|
3. |
தட்டையான
கலத்தில் கஞ்சித் |
|
தண்ணீரை
விட்டு நன்றாய்க் |
|
குட்டைநரி
குடித்ததுவே |
|
கொக்குக்கோ முடியவில்லை |
|
|
4. |
கொக்கதன்பின்
பதில்விருந்தில் |
|
கூசாவில்
கறிவைத்துத் |
|
தக்கபடி தின்றுதின்று |
|
தான்ஏப்பம்
இட்டதுவே |
|
|
5. |
கூசாவில்
நரிதலையைக் |
|
கொண்டுபோக
முடியாமல் |
|
பேசாமல்
இருந்திருந்து |
|
பிறகுதான்போய்
விட்டதுவே |
|
|
6. |
எப்படிநாம்
பிறருக்கு |
|
ஏதொன்றைச்
செய்கிறோமோ |
|
அப்படியே
பிறர்நமக்கும் |
|
ஐயமறச்
செய்திடுவார். |
|
|
|