|
'பச்சைமலை
பவளமலை' என்ற மெட்டு. |
|
குறத்திப்பாட்டுப்
போல் பாடவேண்டும். |
|
|
1. |
குன்றிமுத்து,
புளியமுத்து, இலுப்பைமுத்து இன்னும் |
|
குறுக்குமுத்து,
வேப்பமுத்து, ஆமணக்கு முத்து |
|
|
2. |
வெள்ளைக்குன்றி முத்தெடுத்து வெள்ளிக்கிண்ணம் வைத்து |
|
கருப்புக்குன்றி முத்தெடுத்து கருப்புக்கிண்ணம் வைப்பாய் |
|
|
3. |
சிவப்புக்குன்றி
முத்தெடுத்துச் சிவப்புமுட்டை போடு |
|
சிவப்புமுட்டை
பார்த்திருக்க மாட்டாய் சின்னத் தம்பி! |
|
|
4. |
ஆமணக்கு முத்தெடுத்து
அ ஆ வை எழுது |
|
பூமணக்கும்
புளியமுத்தால் பு பூ வை எழுது |
|
|
5. |
குறுக்குமுத்தை
எடுத்தேஒரு குறுங்கட்டில் போடு |
|
நெருக்கமாக
இலுப்பை முத்தால் நேர்கோடு போடு |
|
|
6. |
நாய்வேம்பு
முத்தெடுத்து நாற்கோணம் வரைவாய் |
|
நல்லவேம்பு
முத்தெடுத்து நாற்காலி வரைவாய். |