1. |
எழுந்து நின்றதும்
நூலை இடக்கையில் பிடிப்பாய் |
|
அழுந்த ஒலித்துப்
பொருள் அறியவே படிப்பாய் |
|
|
2. |
நேராக நின்று
கைகால் நெகிழ விடாதே |
|
மார்புமுன்
நூலைப்பிடி முகம்மறைக் காதே |
|
|
3. |
காற்புள்ளி யென்ற காமா கண்டொரு நொடியில் |
|
மேற்செமிக்
கோலனுக்கு மேலொரு நொடிநில் |
|
|
4. |
கோல
னிருக்குமிடம் குறித்துமுந் நொடிநில் |
|
சீல முற்றுப்
புள்ளிக்குச் சேர்த்துநால் நொடிநில் |
|
|
5. |
ஏற்றியும்
இறக்கியும் இடந்தகக் குரலே |
|
மாற்றி
மாற்றி வாசிப்பாய் மாண்பது நாலே. |