1. |
காலையி லெழுந்திருந்து
கடவுளைத் தொழுதிடாய் |
|
சீலச் செயல்களெல்லாம்
சீர்பெற முடித்திடு |
|
|
2. |
பல்லைப்
பொடியால் தேய்த்துப் பாலைப்போல் விளக்கியே |
|
நல்ல நீரில்
குளித்து நல்கும் உணவை உண்ணுவாய் |
|
|
3. |
பாடத்தைப்
படித்து நல்ல பயனை மனத்தில் பதித்தபின் |
|
நாடிப் பெற்றோர்க்கு
வேலை நயந்து திருந்தச் செய்குவாய் |
|
|
4. |
வேளை
யானவுடனே விரும்பிப் புத்தகத்துடன் |
|
சால விரைந்துபாட
சாலைக்குச் செல்லுவாய். |