ம. ம : | ஒரு குழுவார் பிறர்க்குத் தெரியாது மறை பொருளவாகத் தமக்குள் வழங்கும் குறிகளே குழூஉக்குறி யாயினும். அவற்றுள் பொருள் வெளிப்பட்டவும் பண்டைநிலை நோக்கிக் குழூஉக்குறி யெனப்படும். ஆசிரியன் குழூ உக்குறிகட்குப் பொருள் கூறும்போது, வெளிப்படையானவற்றிற்குப் பொருள் கூறான். இது போன்றதே மேற்கூறிய நூற்பாக் கூற்றுமென்பது. |
மேலும், செய்யுட்கே யுரியதும் செய்யுட்கும் உரை நடைக்கும் பொதுவானதுமெனச் செய்யுட்சொல் இருவகை. அவற்றுள், செய்யுட்கே யுரிய சொல்லே உரிச்சொல்லெனப் படுவது என்பதைக் குறித்தற்கே, வெளிப்படு சொல்லைச் சொல்லென்றும் வெளிப்படாச் சொல்லை உரிச்சொல்லென்றும் தொல்காப்பியர் குறித்ததூஉமென்க. மேலும், உரிச்சொற்பெயர் ஒரு சொல்லை மட்டுமன்று, அது செய்யுளில் சிறப்பாக ஒரு பொருளில் வழங்கற்பாட்டையும் பொறுத்தது. செல்லல் என்பது போதலைக் குறிப்பின் தொழிற்பெயர்; பிறரிடம் போயிரக்கும் வறுமையாகிய இன்னாமையைக் குறிப்பின் உரிச்சொல். வாள் என்பது கருவியைக் குறிப்பின் பெயர்ச்சொல்; அதன் ஒளியைக் குறிப்பின் உரிச் சொல். இங்ஙனமே பிறவும். கதழ் துனை போன்ற சொற்கள், உலக வழக்கில் வழங்காமையால், எல்லாப் பொருளிலும் உரிச்சொல்லாகும். இங்ஙனம், சொல்லே உரிச்சொல்லாவதும், ஒவ்வொரு பொருளில்மட்டும் உரிச்சொல்லாவதுமென, உரிச்சொல் இருவகை. பழுது முழுது முதலிய சொற்கள், இக்காலத்தில் வெளிப்படையாயினும், தொல்காப்பியர் காலத்தில், அல்லது அவர்க்கு முன்னொரு காலத்தில், வெளிப்படையல்லாதிருந்திருக்க வேண்டும். மறை வெளிப்படையாவதும் வெளிப் படை மறையாவதும் சொற்கட்கியல்பே (2) | ம: தட, கய முதலிய சொற்கள் அகரவீறாயிருப்பதால் அஃது ஒரு தனிச் சொல்வகையைக் குறிக்கும் என்பது. |
|