பக்கம் எண் :

104ஒப்பியன் மொழிநூல்

(4)

உ :

வினைவேரே உரிச்சொல் என்பது.

ம :

வினைவேர் (தாது) ஏவலாகவும் பகுதியா கவும் வினையியலிற் கூறப்பட்டுள்ளது. வினைவேரை வேறாகக் கூறின், இடை வேரையும் வேறாகக் கூறவேண்டும். குரு மாலை முதலிய பெயர்ச்சொற்களும் செல்லல் அலமரல் முதலிய வினைச் சொற்களும் ஏ ஐ முதலிய இடைச்சொற் களுமாக, உரிச்சொல் மூவகைப்படுதலா னும், அவற்றுள் வினைச்சொல் பகுதியும் தொழிற்பெயருமாக இரு வேறு வடிவிற் கூறப்படுதலானும், உரிச்சொல்லை ஒரு தனிச்சொல் வகையென்றும், வினைவே ரென்றும் கூறுதல் தவறே என்பது.

(5)

உ :

“உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி
நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி”

உரிச்சொல் என்பது.

(குற்றி. 77)

ம :

இதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ள விண்ண விணைத்தது, வெள்ள விளர்த்தது முதலிய காட்டுகளில், நிலைமொழிகள் இடைச்சொல்லாயும் வருமொழிகள் வினைச்சொல்லாயு மிருத்தலின், இவ்வுரை போலியுரை யென்பது.

பிறர் மறுப்புக்கு மறுப்பு

உரிச்சொல் செய்யுட்சொல்லேயென்று, முன்னமே நான் செந்தமிழ்ச் செல்வியில் ஒரு கட்டுரை வரைந் திருக்கின்றேன். அதன் உண்மையை உணராத சிலர், பலவாறு மறுப்புக் கூறியிருக்கின்றனர். அம் மறுப்பும் அதன் மறுப்புமாவன:

(1) ம :

“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன”

(உரி. 2)

என்று தொல்காப்பியர் வெளிப்படுசொல்லும் உரிச்சொல்லுள் அடங்கக் கூறியிருப்பதால், உரிச்சொல் செய்யுட் சொல்லன் றென்பது.