பக்கம் எண் :

தமிழ்மொழித் தோற்றம் 107

கா :வளர (மலையாளம்) = மிக.
வடசொல் வடமொழிச் சொல்.

கிளவி

கிளவியென்பது பெயர் முதலிய நால்வகைச் சொல்லுக்கும் பொதுப்பெயர். கிளத்தல் சொல்லுதல்.

இலக்கணநூல் தோன்றுமுன்னமே, திணை பால் எண் இடம் வேற்றுமையும், வினாவும் செப்பும் பிறவும்பற்றிய மரபுகளும், தமிழில் அமைந்திருந்தன. அவற்றின் பாகுபாடுகளும் குறியீடுகளுமே இலக்கணிகளா லுண்டானவை. இதைக் குறித்தற்கே கிளவியாக்கம் முதலிய நான்கு இயல்கள், தொல் காப்பியத்திற் பெயரியலுக்குமுன் கூறப்பட்டுள்ளன.

பெயர்ச்சொல்

பெய் + அல் = பெயல் - பெயர். பெய்தல் இடுதல். பாட்டன் பெயரும் பெயரன்(பேரன்) பெயரும் மாறி மாறி வந்தது பிற்காலமாதலின், பெயர்தற்பொருள் பிற்பட்டதாகும்.

பொருட்பெயர் - மூவிடப்பெயர்

தன்மை : ஏ தன்மைச்சுட்டு.
ஏ + ன் = ஏன் (ஒருமை). ஏ + ம் = ஏம் (பன்மை).
ஏன் - யான் - நான். ஏம் - யாம் - நாம்.
யாம் + கள் = யாங்கள். நாம் + கள் = நாங்கள்.

யாம் தனித்தன்மைக்கும் நாம் உளப்பாட்டுத்தன்மைக்கும் வரையறுக்கப்பட்டன.

முன்னிலை : ஈ அண்மைச்சுட்டு.

ஈ + ன் = ஈன் - (யீன்) - நீன். ஈ + ம் = ஈம் - (யீம்) - நீம்.

நீன் - நூன், நீம் - நூம். நீம் + கள் = நீங்கள். நீன் - நீ. நீமர்- நீமிர் - நீவிர் - நீயிர் - நீர்.

நீன், நீம், நீமர் என்பவை இன்றும் தென்னாட்டில் உலக வழக்கில் வழங்குகின்றன. செந்தமிழ் தோன்றிய காலத்தில், நீ நீயிர் நீவிர் என்பன சிறந்தனவாகக் கொள்ளப்பட்டதினால், ஏனைய