சாரியை, கரம் காரம் கான் என்னும் எழுத்துத் துணையொலிகள், சாரியை இடைநிலையென்று உண்மையில் சொல்லுறுப்பில்லை. கைலையங்கிரி = கைலை என் கிரி. கூட்டாஞ்சோறு = கூட்டு ஆம் சோறு. புளியம்பழம் = புளியின்பழம், ஆலங்காடு = ஆலம் + காடு. வல்லோசையுள்ள தோன்றல் திரிதல் இரட்டல் ஆகிய புணர்ச்சிகள் முதுபழந்தமிழில் இல்லை. அறிஞன் என்பதில் ஞகரம் போலியே. அறிநன் - அறிஞன். அறிகின்றான் - அறியுன்னான் - அறியுன்னன் - அறியுநன் - அறிநன். னகரந் தோன்றுமுன் நகரமே வழங்கிற்று. அசைநிலையென்று ஒரு சொல்லுமில்லை. பொருள் குன்றிய அல்லது பொருள் தெரியாத அல்லது தவறாகப் பிரித்த சொற்களையே அசைநிலையென்று இலக்கணிகள் கூறிவிட்டனர். அதனால் பிற்காலத்தார் அவற்றைப் பொருளின்றியும் வழங்கினர். அசைநிலைச் சொற்கள் மா | : | “ புற்கை யுண்கமா கொற்கை யோனே” மாகொற்கையோனே என்று பிரிந்திசையும். | மியா | : | கேளுமையா - கேளுமியா - கேள்மியா - கேண்மியா. | இக | : | 'கண்பனி யான்றிக'. ஆன்றுஇக = நிறைந்து விழ. | ஏ | : | செல்லுமையே - செலுமியே - சென்மியே - சென்மே. ஐயே - (இயே)-ஏ-ஏன். கா : வாருமே, வாருமேன். | மோ | : | மொழியுமையோ - மொழியுமியோ - மொழி மியோ- மொழிமோ. | மதி | : | மதி = அளவு, போதும். செல்மதி = போ, அது போதும். | அத்தை | : | அதை - அத்தை. ஒ.நோ: 'எத்தால் வாழலாம்.' | இத்தை | : | இதை - இத்தை. | வாழிய | : | வியங்கோள்வினை. |
|