பக்கம் எண் :

தமிழ்மொழித் தோற்றம் 153

மாள

'தவிர்ந்தீக மாள.‘ மாள = முடிய, முற்றிலும்.

 
:

சென்று + ஈ = சென்றீ = சென்றாய்.

 
யாழ :

“ யாழநின்” = யாழ்போலும் இனிய நினது (கலித்.18).

 
யா : யா பன்னிருவர் மாணாக்கர். யார் அல்லது யாம் என்பதன் ஈற்றுமெய்
விட்டுப்போயிருக்கலாம். யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப்பெயரே 
ஒரு காலத்தில் உயர்திணைக்கும் வழங்கிற்று.
 
கா : 'இவள் காண்டிகா' காண்டி = பார். கா = காத்துக் கொள்.
 
பிற :

'ஆயனையல்ல பிற' = ஆயனையல்லாத மற்றவை.

 
பிறக்கு : 'பிறக்கதனுட் செல்லான்'. பிறக்கு = பிறகு.
 
அரோ :அரன் என்பதன் விளி. அரோ = சிவனே.
 
போ :

இது வெளிப்படை. மறுப்புப் பொருளில் உலக வழக்கிலும் வழங்கும்.

 
மாதோ :

மகடூஉ முன்னிலை. மாதோ = பெண்ணே.

 
இகும் : 'கண்டிகும்.' இகும் = இடும். இடுதல் = கொடுத்தல்.
 
சின் :உரைத்து + ஈ = உரைத்தீ. உரைத்தீயினோர் - உரைத்தீசினோர் - 
உரைத்திசினோர்.ஈ துணை வினை. ஈதல் = கொடுத்தல். என்றீயேன்
(என்றிட்டேன்) - என்றியேன் - என்றிசேன் - என்றிசின்.
 
குரை : குரு + அ = குர - குரை = பெருமை. ஒ.நோ: குரு + அவு = குரவு. குரவு +
அன் =குரவன் = பெரியோன். “ பல்குரைத் துன்பம்” , “ பெறலருங்
குரைத்தே.”
 
ஓரும் :

ஓர் = உணர், ஒன்று. “ அஞ்சுவதோரும் அவா” = அஞ்சுவதொன்றும்

அவாவே; (அல்லது) அஞ்சுவது அவா, அதை நீர் உணரும். அதனோரற்றே
அதனொடு ஒரு தன்மைத்து. அன்றே = அல்லவோ. போலும் இருந்து முதலிய
பிறசொற்கள் வெளிப்படை.

சில இடைச்சொற்கள் வீண் வழக்கால் பொருளிழந்துள்ளன. கா : ஊரிலே - ஏ; மரத்தினின்றும் - உம்.