பக்கம் எண் :

158ஒப்பியன் மொழிநூல்

4

உலக முதன்மொழிக் கொள்கை

1. மாந்தன் தோன்றியது குமரிநாடாயிருக்கலாம் என்பது

இதற்குச் சான்றுகளும் காரணங்களும்:

(1) குமரி நாட்டின் பழைமை.

(2) ஹெக்கேல் ஸ்கிளேற்றர் முதலியோர் இலெமுரியா மாந்தன் தோன்றிய இடமாகக் கூறியிருத்தல்.

(3) குமரிநாட்டு மொழியின் தொன்மையும் முன்மையும்.

(4) தென்னாட்டுப் பெருங்கடல்கோட் கதை உலக முழுதும் வழங்கல்.

(5) மக்கள் கிழக்கிலிருந்து வந்தார் என்று யூத சரித்திரங் கூறல்.1

(6) தொன்மரபினரான மாந்தர் பெரும்பாலும் தென் ஞாலத்திலிருத்தல்.

(7) குமரிநாடிருந்த இடம் ஞாலத்தின் நடுமையமா யிருத்தல்.

(8) குளிரினும் வெம்மையே மக்கட்கேற்றல்.

(9) தென்ஞாலத்தின் வளமை.

உலகத்திற் கிடைக்கும் பொன்னும், வயிரமும், பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, தென்னிந்தியா, தென்கண்டம் (Australia) ஆகிய இடங்களிலேயே எடுக்கப்படுகின்றன.

(10) முதல் மாந்தன் வாழக்கூடிய கனிமரக்கா (ஏதேன்) தென்ஞாலக் குறிஞ்சி நாடுகளிலேயே காணக் கூடியதாயிருத்தல்.


1. பழைய ஏற்பாடு முதற்புத்தகம், 11 : 1