பக்கம் எண் :

உலக முதன்மொழிக் கொள்கை 159

குறிப்பு : கிறித்தவ விடையூழியர் கானான் நாட்டை ஞாலத்தின் மையம் என்று கூறுவது தவறாகும். அந்நாடு நள்ளிகை (Equator)க்கு வடக்கே 30ஆம் 40ஆம் பாகைகட் கிடையிலுள்ளது. குமரிநாட்டிடமோ நள்ளிகையின் மேலேயோ உள்ளது. மேலும், பண்டை ஞாலத்தில் தென் பாகத்திலேயே நிலம் மிக்கிருந்ததென்றும், கானான் நாட்டு நிலம் நீர்க்கீழ் இருந்ததென்றும் அறியவேண்டும்.

ஆதியாகமத்தில் மாந்தன் படைப்பை யூத சரித்திரத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறது.

யூதர் முதல்மக்கள்வகுப்பா ரல்லர் என்பதற்குக் காரணங்கள்:

(i) பழைய ஏற்பாட்டில் 4000 ஆண்டுச் சரிதையே கூறப்பட்டுள்ளமை.

இதுபோது 6000 ஆண்டுகட்கு மேற்பட்ட மரங்கள் உள்ளனவாகச் சொல்லப்படுகிறது. தமிழ்மொழி தோன்றிய காலம் எவ்வகையினும் கி.மு. 5000 ஆண்டுகட்குப் பிற்படாது.

(ii) காயீன் தன்னைப் பலர் கல்லெறிவார் என்று கூறியிருத்தல்.

(iii) மக்கள் கிழக்கிலிருந்து வந்தாரென்று யூத சரித்திரங் கூறல்.

(iv) யூதர் தேவ புத்திரரைக் கண்டாரெனல்.

தேவ புத்திரரென்று உலகில் சொல்லத்தக்கவர் வெள் ளையரான ஆரியர். ஆரியரைத் தேவரென்று சொல்லத் தக்கவர் தென்னாட்டிலிருந்து சென்ற கருப்பராயிருந்திருத்தல் வேண்டும்.

(v) உலக முழுதும் ஒரே மொழி வழங்கிற்றென்று ஆதியாகமத்திற் கூறியிருத்தலும், எபிரேய மொழி உலக முதன் மொழியாதற் கேற்காமையும்.

(vi) எபிரேய மொழியில் பல தமிழ்ச்சொற்கள் சிதைந்து கிடத்தல்.

கா : ஆப் (அப்பன்), ஆம் (அம்மை), நூன் (மீன்), வாவ் (வளைவு), மேம் (மேகம் = நீர்), பே (வாய்). மேகம் என்பது