கா : தமிழ் | மேலையாரியம் | கீழையாரியம் | ஆன்மா | animos | atma | நாவாய் | navis | nau | வேட்டி | vestis | vasthra | இஞ்சிவேர் | zingiber, zingiberi | sringa-vera | இரும்(பு) | iren, eisen | ayas |
(3) ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின் அல்லது கீழையாரிய வாயிலாகச் சென்றவை. கா : தமிழ் | மேலையாரியம் | கீழையாரியம் | கப்பி | ape | kapi | குருமம் | thermos, formus, warm | gharma | அகம்(மனம்) | ego, Ich, Ic, I | aham | தா(நில்) | sta, esta | sta | படி-பதி-வதி | wes, wis, was | vas |
குறிப்பு : (1) அரக்கு, அரக்கம், அரத்தம், அலத்தம், அலத்தகம், இரத்தி, இலந்தை முதலிய தென்சொற்களை நோக்கின், அர் அல்லது இர் என்னும் ஒரு வேர்ச்சொல் சிவப்புப் பொருளை யுணர்த்துவது தெளிவாகும். அருக்கன், அருணம், அருணன் முதலிய (வட) சொற்களும் இவ் வேரினின்றே பிறந்தனவாகும். இங்ஙனம் பல வட தென் சொற்கள் ஒரே மூலத்தன. (2) கப்பு = மரக்கிளை. கப்பில் வாழ்வது கப்பி. “ கோடு வாழ் குரங்கு” (மரபியல், 13) என்றார் தொல்காப்பியரும். (3) குரு = வெப்பம், வெப்பத்தால் தோன்றும் கொப்புளம், ஒளி, ஒளிவடிவான ஆசிரியன். குரு = சிவப்பு. குருதி, குருதிக் காந்தள், குருதிவாரம் என்னும் சொற்களை நோக்குக. “ குருவுங் கெழுவும் நிறனா கும்மே” (உரி. 5) என்றார் தொல்காப்பியர். குருத்தல் தோன்றுதல். குருப்பது குருத்து. குரு - உரு. குருமம் - உருமம்.
|