பக்கம் எண் :

உலக முதன்மொழிக் கொள்கை 167

பொருள்படினும் கோட்டம் அல்லது கொட்டம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபே. கொடு + அம் = கொட்டம். கொடு + இல் = கொட்டில்.

புரி + சை = புரிசை. புரி + அம் = புரம் - E. borough, burgh, புரி - bury. கோபுரம் = அரசன்மனை, அரசநகர். முதலாவது அரசன் வெள்ளத்தினின்றும் பகைவரினின்றும் தற்காக்க எழுநிலை மாடத்தில் அல்லது உயர்ந்த கட்டடத்தில் வதிந்தான். பின்பு அது மிகவுயரமாய் வடிவுமாறிக் கோவிலுறுப்பாயிற்று. ஒ.நோ: கோயில் = அரசன் மனை, தெய்வ இருப்பிடம். புரம் - புர. புரத்தல் காத்தல். புரவலன் புரப்பதில் வல்லவன், புரந்தருபவன் புரந்தரன். ஒ.நோ: A.S. beorgan, Ger. bergen, to protect, from burg.

மேலையாசியப் பாங்கரில், துரேனியமும் ஆரியமும் சேர்ந்து சேமியம் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது.

பால்டிக் பாங்கரினின்று, முதலாரியர் காக்கசஸ் மலையின் தென்பாகத்தில் வந்து குடியேறி யிருக்கின்றனர். பின்பு அங்கிருந்து மேற்கொரு பிரிவாரும் கிழக்கொரு பிரிவாரும் பிரிந்து போயிருக்கின்றனர். கிழக்கே வந்தவரே இந்திய ஆரியர். இந்தியாவிற்கு வந்த ஆரியருள் ஒரு பிரிவார் திரும்பவும் மேலையாசியாவிற்குச் சென்றிருக்கின்றனர்.1 அவரே பெர்சிய அல்லது ஸெந்து (Zend) ஆரியர்.

இந்திய ஆரியரது மொழி இந்தியாவிற்கு வருமுன் இப்போதுள்ள நிலையிலில்லை. இலத்தீன், கிரேக்கம், ஜெர்மானியம் என்ற மூன்று மொழிகட்கும் நெருங்கிய நிலையிலேயே யிருந்தது; அப்போது ஆரியம் என்னும் பொதுப் பெயரேயன்றி ஒரு விதப்புப் பெயரும் அதற்கில்லை.

இந்திய ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின்னரே, அவரது மொழிக்குச் சமஸ்கிருதம் என்னும் ஆரியப்பெயரும், வடமொழி என்னும் தென்மொழிப்பெயரும் தோன்றின.

வடமொழிக்கு வேதகால வடிவும் பிற்கால வடிவுமென இரு நிலைகளுண்டு. வேத காலத்திலேயே, வடஇந்தியத் திராவிட மொழிச் சொற்கள் பல வடமொழியிற் கலந்து விட்டன. வட


1. L.S.L. Vol. I. pp. 287, 288