பக்கம் எண் :

168ஒப்பியன் மொழிநூல்

இந்திய மொழிகளெல்லாம், உண்மையில் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் பிறந்த இருபிறப்பி மொழிகளேயன்றி, தனி ஆரியக் கிளைகளல்ல.

மேனாட்டாரிய மொழிகட்கில்லாது, சமஸ்கிருதத்திற்கும் திராவிடத்திற்கும் பொதுவாயுள்ளவை யெல்லாம், தமிழினின்றும் வடமொழி பெற்றவையே.

கா : உயிர்மெய்ப்புணர்ச்சி, ட ண முதலிய சில ஒலி கள், எழுத்துமுறை, எட்டு என்னும் வேற்றுமைத்தொகையும் அவற்றின் முறையும், சில கலைநூல்கள் முதலியன.

வடமொழியில் வழங்கும் நூற்றுக்கணக்கான சொற்கள் தென்சொற்களென்பது, மூன்றாம் மடலத்திற் காட்டப்படும்.

வடநூல்களிலுள்ள பொருள்களிற் பெரும்பாலன, ஆரியர் வருமுன்னமே வடஇந்தியாவில் அல்லது இந்தியாவில் வழங்கியவை யென்றும், அவற்றைக் குறிக்கும் சொற்களே ஆரிய மயமென்றும் அறிதல் வேண்டும்.

உலக மொழிகள் எல்லாவற்றிலும், வளர்ச்சியிலும் திரிபிலும் முதிர்ந்தது வடமொழியாகும். இதனாலேயே 'நன்றாகச் செய்யப்பட்டது' என்னும் பொருள்கொண்ட 'சமஸ்கிருத்' என்னும் பெயரை வடமொழி ஆரியரே அம்மொழிக் கிட்டுக் கொண்டனர். வடமொழியை ஆரியத்திற்குக்கூட மூலமொழியாகக் கொள்ளவில்லை மேனாட்டார்.1

வடமொழி முதிர்ச்சியைக் காட்ட இங்கு ஒரு சான்று கூறுகின்றேன்.

மெய்யெழுத்துகளின் தொகை

தென்கண்ட (ஆத்திரேலிய) மொழிகளில் 8; பலநீசிய (Polynesian) மொழிகளில் 10; பின்னியத்தில் 11; மங்கோலியத்தில் 18; இலத்தீனிலும் கிரேக்கிலும் 17; ஆங்கிலத்தில் 20; எபிரேயத்தில் 23; காப்பிரி(Kaffir)யில் 26; அரபியில் 28; பெர்சியத்தில் 31; துருக்கியத்தில் 32; வடமொழியில் 39; அரபி, பெர்சியம், சமஸ்கிருதம் என்னும் மூன்றன் கலவையான


1. Principles of Comparative Philology, p. vii