பக்கம் எண் :

32ஒப்பியன் மொழிநூல்

(vii) வட இந்திய மொழிகளில் திராவிட அடையாளம்

ஆரியர் வருமுன் வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள், அவர் வந்தபின் ஆரியத்தொடு கலந்து போனமையால், ஆரியத்திற்கு மாறான பல திராவிட அமைதிகள் இன்றும் வடநாட்டு மொழிகளிலுள்ளன. அவையாவன:

(1) பிரிக்கப்படும் ஈற்றுருபால் வேற்றுமையுணர்த்தல்.

(2) ஈரெண்ணிற்கும் வேற்றுமையுரு பொன்றாயிருத்தல்.

(3) முன்னிலையை உளப்படுத்துவதும் உளப்படுத்தாதது மான இரு தன்மைப்பன்மைப் பெயர்கள்.

(4) முன்னொட்டுக்குப் பதிலாகப் பின்னொட்டு வழங்கல்.

(5) வினையெச்சத்தாற் காலம் அமைதல்.

(6) தழுவுஞ் சொற்றொடர் தழுவப்படுஞ் சொற்றொடர்க்கு முன்னிற்றல்.

(7) தழுவுஞ்சொல் தழுவப்படுஞ்சொற்கு முன்னிற்றல்.1

இந்தியில் பல தமிழ்ச்சொற்களும் இலக்கண அமைதிகளும் வழக்குகளும் வழங்குகின்றன.

சொற்கள்

தமிழ் இந்தி பொருள்

ஆம்

ஹாம்

yes

இத்தனை

இத்னா

இவ்வளவு

உத்தனை

உத்னா

உவ்வளவு

உம்பர்

உப்பர்

மேலே

உழுந்து

உடத்

(ஒரு பயறு)

ஓரம்

ஓர்

பக்கம்

கடு

கடா

கடினமான

கிழான்

கிஸான்

உழவன்

சவை

சபா

அவை

செவ்வை

சாப்வ்

துப்புரவு

தடி

சடீ

கம்பு


1. Caldwell's Comparative Grammar: Introduction, p. 59