பக்கம் எண் :

8ஒப்பியன் மொழிநூல்

தமிழில் 8 வேற்றுமையும் ஒரே காலத்தில் தோன்றி னவையல்ல. முதலாவது 5 அல்லது 6 வேற்றுமைகள்தாம் தோன்றி யிருக்க முடியும். இறுதியில் தோன்றினது எட்டாம் வேற்றுமை. அது ஒரு காலத்தில் முதல் வேற்றுமையின் வேறுபாடென்று அதனுள் அடக்கப்பட்டது. இதையே,

“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென்
றோதிய புலவனு முளன்”

என்பது குறிக்கும். ஆங்கிலத்திலும் விளிவேற்றுமையை முதல் வேற்றுமையின் வேறுபாடு (Nominative of Address) என்றே கூறுவர்.

ஐந்திர இலக்கணத்தில், விளிவேற்றுமை முன்னூல் களிற் போல முதல் வேற்றுமையில் அடக்கப்படாது, தனி வேற்றுமையாகக் கூறப்பட்டது. இதையே,

“இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்” என்று கூறினர் அகத்தியர்.

வேற்றுமைகள் தோன்றின வகையும் முறையும் பின்னர்க் கூறப்படும்.

(4) அகத்தியம் முத்தமிழிலக்கணமாதல்

ஒரு மொழியில், முதன்முத லிலக்கணம் தோன்றும் போது, கூடிய பக்கம் எழுத்து சொல் யாப்பு என்ற மூன் றுக்கே தோன்றும். அகத்தியத்தில் இம் மூன்றுடன் பொருளி லக்கணமும், அதன் மேலும் இசை நாடக விலக்கணங்களும் கூறப்பட்டிருத்தலின், அது முதனூலாயிருக்க முடியாதென் பது தேற்றம்.

அகத்தியத்திற்கு ஆரியவிலக்கணத் தொடர்பின்மை

அகத்தியம் வடமொழி யிலக்கண நூல்கட்கு மிகமிக முந்தியதாதலானும், தமிழிலக்கணத்திலுள்ள குறியீடுக ளெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யாதலானும், வடமொழி யிலக்கணத் திலில்லாத சில சொல்லமைதிகளும் பொருளிலக் கணமும் இசை நாடகவிலக்கணமும் தமிழிலுண்மையானும், ஆரியர் இந்தியாவிற்குள் புகு முன்பே திராவிடர் தலைசிறந்த நாகரிகம் அடைந்திருந்தமையானும்.