3. தமிழ்மொழித் தோற்றம் (1) கத்தொலிகள் (Cries) காட்டு : ஓ, கோ, கூ. இவை துன்பத்திற் கத்தும் அரற்றொலிகள், அல்லது பிறரைக் கூப்பிடும் விளிப்பொலிகள். ஓ - ஓசை, ஓதை; ஓல் - ஓலம், ஓதை - ஓது. ஓல் - ஒல் - ஒலி. கூ - கூவு. கூ (க்குரல்). கூப்பு (தொழிற்பெயர்) + இடு = கூப்பிடு. (2) ஒப்பொலிகள் (Imitatives) காட்டு : கூ - (கூயில்) - குயில். ஓ.நோ: (கூக்கூ) - குக்கூ (cuckoo), கக்கூ என்பது பிற்காலத் துச்சரிப்பு. மா - மாடு; காகா - காக்கா - காக்கை - காகம்; குர் - குரங்கு. ஒலிக்குறிப்புகள் (Onomatopoeia) காட்டு : பட்(டு) - படு(விழு). தூ - துப்பு. உரறு (roar), அரற்று (rattle), பிளிறு (blare), கரை (cry, crow) முதலிய சொற்களெல்லாம் ஒலிக்குறிப்பே. உணர்ச்சிவெளிப்பாட்டொலிகள் (Interjections) ஒளி - பளபள, தகதக, பலார், பளிச்சு (flash). நிறம் - பச்சு, வெள், கரு. `
|