பக்கம் எண் :

84ஒப்பியன் மொழிநூல்

ஊறு - பிசு, குறுகுறு, சுரசுர, மெத்து.

நாற்றம் - கம், கமகம.

விரைவு - சடு (சட்), E. sudden, சடார், திடும், திடீர், பொசுக்கு.

அச்சம் - துண், திடுக்கு, பே.

இரக்கம் - ஆ, ஆஆ - ஆவா - ஆகா.

அருவருப்பு - சீ, சே, சை.

வியப்பு - ஓ, ஆ, ஏ, ஐ, ஆஆ - (ஆவா) ஆகா.

தெளிவு - ஓ, ஓஓ - ஓவோ - ஓகோ.

சுருக்கம் - சிவ், சிவுக்கு.

விரிவு - பா, பளா.

பருமை - பொந்து, பொது, பொதுக்கு.

செறிவு - கொசகொச, மொசுமொசு.

கனம் - திண்.

கேடு - நொசநொச.

பொலிவு - சம், (ஜம்).

மூட்சி - குப்.

ஏவல் - உசு (உஸ்).

விளி - தோ, சூ, பே.

அமைத்தல் - உசு (உஷ்), E. hush.

நுணுகி நோக்கினால், எல்லாக் குறிப்புகளும் ஒலிக் குறிப்பினின்றே தோன்றினமை புலனாகும் ஆ, ஈ, ஊ என்பவை சுட்டடிகள்.

குறுகுறு என்பது காதில் அங்ஙனம் ஒலிப்பது. பிசுபிசு என்பது பசையுள்ள பொருளைத் தொடும்போது தோன்றும் ஒலி. திடும் என்பது ஒரு பொருள் திடீர் என்று விழும் ஒலி. ஆ என்பது நோவு தோன்றும்போது அரற்றும் ஒலி. இங்ஙனமே பிறவும்.

பிசு என்னுங் குறிப்பினின்று, பிய், பிசின், பிசிர், பிசினி, பிசினாறி முதலிய சொற்கள் பிறக்கும். இங்ஙனமே பிறவற்றினின்றும்.