முட்டு - E. butt, buttress. meet, moot என்னுஞ் சொற்கள் முட்டு என்பதினின்றும் திரிந்தவையே. A.S. metan, to meet; mot, an assembly, முட்டு - முட்டி - கைகால் பொருத்துகள். ஈங்கு - இங்கு, ஈ - இ. இறங்கு, இழி, இளி, ஈனம். இவை இறங்கலும் இழிவும் குறிக்கும். மேட்டடியில் நிற்கும் போது அண்மை இறக்கமாகும். ஈர், இழு - இசு - இசி, இழு - இழுகு - இழுது - எழுது. இவை பின்னுக்கு அல்லது அண்மைக்கு இழித்தலையும், பின்னுக்கு இழுத்து வரைதலையுங் குறிக்கும். இட, இணுங்கு என்பவை இழுத்தொடித்தலைக் குறிக்கும். இடறு என்பது பின் வாங்கி விழுதலையும், இடை என்பது பின் வாங்கி ஓடு தலையும் குறிக்கும். பின் - பிந்து. பின் - பின்று - E. hind, adj; behind, adv; hinder,; v.t. hinderance, n.; A.S. hinder, adj, hindrian, Ger. hindern. v.t. பின் - பிற - பிறகு - பிறக்கு - E. back, A.S. boec, Sw. bak, Dan. bag. திரை = எழினி, அலை, தோற்சுருக்கு, தயிர்த்தோயல். திரைத்தல் = இழுத்தல். வேட்டியை மேலே இழுத்துக் கட்டு தலைத் திரைத்துக் கட்டுதல் என்பர் இன்றும் தென்னாட்டார். திரை (எழினி) இழுப்பது. அலை தோற்சுருக்கு முதலியவை ஆடையை இழுத்திழுத்து வைத்தாற்போலிருத்தல் காண்க. திரை என்னும் சொல்லே ஆங்கிலத்தில் draw என்று திரியும். Drawer என்பது இழுக்கின்ற மரத்தட்டையும், இழுத்துக் கட்டினாற் போன்ற குறுகிய காற்சட்டையையும் குறித்தல் காண்க. திரை என்பதினின்று பல மேலையாரியச் சொற்கள் பிறக்கும். L. traho, Dut. trekken, E. draw. A.S. dragan, Ger. tragen, Ice. drug, draft, drafts, drag, draggle, dragnet; drain, drainage, drainer; draught, draught house, draughts, draught-board, draughtsman; drawback drawsbridge, drawee, drawing, drawing-room, drawl, draw-well; withdraw, dray; dredge, dredger; dregs, dreggy; trace, tracery; track, trackroad; tract, tractability, tractile, tractarian, traction, tractor, tractive, abstract, attract, extract; trail; train, trainer, training, trainband, train-bearer; trait; trawl; treachery; treat, treatise, treatment, treaty; tret; trick; trigger; troll; த்ராவக (வ.) முதலிய சொற்களெல்லாம் திரை என்னும் சொல்லை மூலமாக அல்லது நிலைமொழியாகக் கொண்டவையே. திரைத்தல் = இழுத்தல், இறக்குதல்.
|