என்றார் தொல்காப்பியர். ஏண் என்பதினின்றே ஏணி, ஏணை, சேண், சேணோன் முதலிய சொற்கள் பிறக்கும். சேய்மையிற் செல்லுதல் அல்லது தொடர்ந்தொன்றைச் செய்தல் மேற்செல்லுதலாகக் கூறப்படும். ஒ.நோ: go on, go on reading. மேற்செல்லுதல் என்னும் கருத்தையே ஏ (அம்பு), ஏவு, ஏகு என்னும் சொற்கள் தழுவியன. செய்துகொண்டேயிரு என்பதில் ஏகாரம் தொடர்ச்சியையும், ஒன்றேகால் என்பதிற் கூடுதலையுங் குறிக்கும். Educate, elate, erect, eructate, heave, heaven முதலிய சொற்களெல்லாம், எகர ஏகார அடியாய்ப் பிறந்து, எழல் அல்லது எடுப்புப்பொருளை உணர்த்துபவையே. ஒ.நோ : சுவரெடு - to erect a wall. எகரம் அல்லது எடுத்தல் என்னுஞ் சொல், எடுப்பாக (உயரமாக) வளர்த்தல், வெளியே எடுத்தல், வெளியே எடுத்து நடத்தல், வெளியே என்னுங் கருத்துகளை முறையே தழுவும். ஒ.நோ : L. educo, E. educate, to bring up; to draw out the mental powers of, as a child, L. educo, E. educe, to draw out. L. educo, duco (Aphesis), to lead. L. e, ex; Gk. ec, ex; E. ex, out, out of. பண்டைத்தமிழில் வினைச்சொற்கள் எடுக்க, நடக்க என்று நிகழ்கால வினையெச்ச வடிவிலே கூறப்பட்டிருக்கின்றன. அவையும் கல்லார்வாயில் எடுக்கோ, நடக்கோ என்று ஓகார வீறாகவே வழங்கினதாகத் தெரிகின்றது. இதை இன்றும் மலையாளத்திற் காணலாம். எடுக்கோ, educo (L.) என்னும் சொற்கள் ஒத்திருத்தலைக் காண்க. எடு என்னும் சொல் தமிழில் வெளியே எடு என்னும் பொருளில் வழங்குவதை, வாயாலெடு, காலில் முள்ளெடு
|