பக்கம் எண் :

94ஒப்பியன் மொழிநூல்

துணைவினைப்பேறு - எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு.

முன்னொட்டுச்சேர்பு : முற்படு, உட்கொள்.

பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம்.

அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற்றான்.

சினைமுதல் : வாற்குருவி, கொண்டைக்கடலை.

அடைசினைமுதல் (வண்ணச்சினைச்சொல்) : செங்கால் நாரை.

ஒட்டுப்பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்.

ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துகள் கிளைக்கத்தக்க மூலக் கருத்தையுடையதாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும்.

கா : வள் 

+ இ = வள்ளி - வளி.

+ ஐ = வள்ளை - வளை

+ அம் = வளையம் - வலயம் (வ.)

+ அல் = வளையல்

+ வி = வளைவி

+ அகம் = வளாகம்

+ அம் = வள்ளம் - வளம் - வளமை - வளப்பம். வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும்.

+ அர் = வளர்

+ அல் = வள்ளல்

+ ஆர் = வளார்


வள் 

+ தி = வட்டி,

+ இல் = வட்டில்

+ அணை = வட்டணை

= வண்டி

வண்டி - பண்டி - பாண்டி

+ இல் = பாண்டில்

+ அன் = பாண்டியன்

+ து = வட்டு

+ அகம் = வட்டகம் - (வட்டுகம்)

= வண்டு

- வட்டுவம்