1.
தமிழ் மொழி
எத்திசையும் புகழ் மணக்க இருந்துவரும் தமிழ் மொழி தமிழகத்தின்
தாய்மொழி; தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலரான தமிழ் மக்களின்
தாய்மொழி. தமிழகம் தவிர ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பாண்டிச்சேரி,
அந்தமான் தீவு, மகாராஷ்டிரம், ஒரிசா, வங்காளம், டெல்லி முதலிய
மாநிலங்களிலும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்
குடியேறி இருக்கிறார்கள் அல்லது தங்கி இருக்கிறார்கள். இலங்கையில்
தமிழர்கள் வாழ்கிறார்கள். மொரீஷியஸ் தீவிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
மலேஷியாவிலும் சிங்கப்பூரிலும் மியான்மாரிலும் (பர்மா) தமிழர்கள்
இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலும், பிரான்ஸிலும், ஜெர்மனியிலும்,
ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், கனடாவிலும்
தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் உள்ள தமிழ்
மக்களைக் கணக்கெடுத்தால், அவர்கள் தொகை 7 கோடிக்கு மேல்
இருக்கக் கூடும். இப்பெருந்தொகையினரின் தாய்மொழி தமிழே.
இவ்வனைவரையும் சமய வேறுபாடின்றியும் கொள்கை மாறுபாடின்றியும்
ஒன்றுபடுத்துவது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே.
தொன்மொழி
"உலகில் 6000 மொழிகள் தோன்றின என்றும் அவற்றுள் 2700
மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன" என்றும் ருஷ்யா நாட்டுப்
`பிராவ்தா` இதழ் கூறுகிறது. இந்த 2700 மொழிகளும் தமிழ், வடமொழி,
கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, வங்காளம், உருது, சீனம்,
பாரசீகம், ஈப்ரு, இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம்
போன்றவையே இலக்கிய வளமுள்ள மொழிகளாகும். வடமொழி,
கிரேக்கம், இலத்தீன், ஈப்ரு, சீனம் ஆகியவை போலவே
|